மாரத்தான் பயணங்கள்...
சென்னை "Tower Twisters" நடத்திய மாரத்தான் போட்டியில் 10 கி.மீ பிரிவில் பதிவு செய்து கடந்த ஏப்ரல்-2017 ல் எனது முதல் மாரத்தான் பயணம் ஆரம்பமானது. அவரோடு தங்கி உற்சாகத்தோடும், உந்துதலோடும் ஓடி.. 58 நிமிடத்தில் (Sub1 ல்... அப்படின்னா என்னன்னு அப்புறமா தெரிஞ்சிகிட்டேன்) முடித்தேன்... இந்த சந்தர்ப்பத்தில் நமது குழும உள்ளங்களில் சிலரையும் சந்தித்தேன்.. அளவு கடந்த மகிழ்ச்சி.. ஏதோ விளையாட்டாய் ஓட ஆரம்பித்த நமக்கும் கழுத்தில் "Finisher Medal".. முதலாவது மெடல்.. பூரித்துப்போனேன்... சின்ன வயசுல இதெல்லாம் மிஸ்ஸிங்... அதன் நினைவாக TomTom Cardio Sports Watch என் கையில்...
சென்னை "Tower Twisters" நடத்திய மாரத்தான் போட்டியில் 10 கி.மீ பிரிவில் பதிவு செய்து கடந்த ஏப்ரல்-2017 ல் எனது முதல் மாரத்தான் பயணம் ஆரம்பமானது. அவரோடு தங்கி உற்சாகத்தோடும், உந்துதலோடும் ஓடி.. 58 நிமிடத்தில் (Sub1 ல்... அப்படின்னா என்னன்னு அப்புறமா தெரிஞ்சிகிட்டேன்) முடித்தேன்... இந்த சந்தர்ப்பத்தில் நமது குழும உள்ளங்களில் சிலரையும் சந்தித்தேன்.. அளவு கடந்த மகிழ்ச்சி.. ஏதோ விளையாட்டாய் ஓட ஆரம்பித்த நமக்கும் கழுத்தில் "Finisher Medal".. முதலாவது மெடல்.. பூரித்துப்போனேன்... சின்ன வயசுல இதெல்லாம் மிஸ்ஸிங்... அதன் நினைவாக TomTom Cardio Sports Watch என் கையில்...
அடுத்து சேலம் ரன்னர்ஸ் இந்தியா குழுவினர் ஏற்காடு மலை அடிவாரத்தில் அற்புதமான சூழலில் நடத்திய மாரத்தானை 1 மணி நேரத்தில் ஓடி முடித்தேன். சொந்த ஊரில் மலைப்பாதையில் ஒரு சுகமான அனுபவம்.
இதற்கெல்லாம் திருஷ்டி வைத்தது போல "அனுபவமில்லாத அரைகுறைகள் நடத்தும் மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள கூடாது" என்ற அனுபவத்திற்காக கோவையில் 10 கி.மீ மாரத்தானில் (பெயர் வேண்டாம்) 8.5 கி.மீ (தூரமே அவ்வளவு தான்) 48 நிமிடத்தில் முடித்து அறிவையும் அனுபவத்தையும் கற்றேன்.
அவ்வப்போது பயிற்சியில் 8 கி.மீ..10 கி.மீ.. 12 கி.மீ என ஓட ஆரம்பித்தேன்... நான்கு முறை 21 நாள் சவாலை முடித்தேன்... 10 கி.மீ × 10 நாள் சவாலை நானாக எடுத்து 8 நாட்கள் முடித்தேன்... இடையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தால் தடை... சில நாட்கள் ஓய்வில் அதையும் உடைத்தேன்... முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்தது..
இதற்கெல்லாம் திருஷ்டி வைத்தது போல "அனுபவமில்லாத அரைகுறைகள் நடத்தும் மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள கூடாது" என்ற அனுபவத்திற்காக கோவையில் 10 கி.மீ மாரத்தானில் (பெயர் வேண்டாம்) 8.5 கி.மீ (தூரமே அவ்வளவு தான்) 48 நிமிடத்தில் முடித்து அறிவையும் அனுபவத்தையும் கற்றேன்.
அவ்வப்போது பயிற்சியில் 8 கி.மீ..10 கி.மீ.. 12 கி.மீ என ஓட ஆரம்பித்தேன்... நான்கு முறை 21 நாள் சவாலை முடித்தேன்... 10 கி.மீ × 10 நாள் சவாலை நானாக எடுத்து 8 நாட்கள் முடித்தேன்... இடையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தால் தடை... சில நாட்கள் ஓய்வில் அதையும் உடைத்தேன்... முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்தது..
ஆசை யாரை விட்டது?
அடுத்து அரை மாரத்தான் (21 கி.மீ) ஓட முடியுமா? என்ற கேள்வியை சகோ ராஜ்குமாரிடம் கேட்டபோது "கண்டிப்பாக உங்களால் முடியும்" என்ற பாசிட்டிவ் எனர்ஜியை கூட்டினார்.. "ஆனால் ஒரு 15 கி.மீ முதல் 18 கி.மீ வரை பயிற்சி செய்யுங்கள்" என்றார்... அந்த சமயம் பார்த்து ஒருநாள் 16.5 கி.மீ தொட்டபோது கால் முட்டியில் ஷூவின் காரணமாக ஏற்பட்ட உள் காயம் அதிகமாகி நடக்கவே சிரமப்பட ஆரம்பித்தேன். சரி.. அவ்வளவுதான்.. பதிவு செய்த சென்னை DRHM 2017 முதல் அரை மாரத்தானுக்கு முழுக்கு போட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன்.
ஆபத்பாந்தவனாக சேலத்தை சார்ந்த DiaStride என்ற நிறுவனம் பற்றி அறிந்து சென்றேன். பல சோதனைகள் செய்து எனது காலுக்காக பிரத்தியேகமாக அவர்கள் ஷூ வடிவமைத்து தந்தது புத்துணர்வை அளித்தது. ஷூ மற்றும் பிசியோதெரபி சிகிச்சையின் பலனால் வலியிலிருந்து விடுபட்டேன். சிலநாள் பயிற்சியில் 18.5 கி.மீ ஓடி முடித்தேன்.. அரை மாரத்தானுக்கு ஏறத்தாழ தயார்.. ஆனாலும் உள்ளூர பயம்...
ஆபத்பாந்தவனாக சேலத்தை சார்ந்த DiaStride என்ற நிறுவனம் பற்றி அறிந்து சென்றேன். பல சோதனைகள் செய்து எனது காலுக்காக பிரத்தியேகமாக அவர்கள் ஷூ வடிவமைத்து தந்தது புத்துணர்வை அளித்தது. ஷூ மற்றும் பிசியோதெரபி சிகிச்சையின் பலனால் வலியிலிருந்து விடுபட்டேன். சிலநாள் பயிற்சியில் 18.5 கி.மீ ஓடி முடித்தேன்.. அரை மாரத்தானுக்கு ஏறத்தாழ தயார்.. ஆனாலும் உள்ளூர பயம்...
நட்புகள் ராஜ் மற்றும் ராகுலின் ஊக்கம் எனக்கு உற்சாகம் தந்தது.. இருவரும் உடன் ஓடுவார்கள் என்பதால் இன்னும் கொஞ்சம் தைரியமானேன்.. எதிர்பார்த்தது போலவே அந்த நாளும் வந்தது.. நான் எனது முதல் அரை மாரத்தானை 2:19 மணியில் முடித்தேன் (DRHM 2017). கடுமையான சென்னை தட்பவெப்ப சூழலில் எந்த காயமுமின்றி முடித்த பெருமிதம், கழுத்தில் மாலையாய் முதல் அரை மாராத்தான் பதக்கம்... கால் மற்றும் உடல்வலி சுத்தமாய் காணாமல் போனது..
அடுத்தது சென்னை டிரையல் மாரத்தான் என்ற மலை சார்ந்த பகுதிகளில் ஓடும் அனுபவத்தை பெற செப்டம்பர் 10 ல் சென்னை டிரையல் மாரத்தான் 21 கி.மீ பதிவு செய்தேன்... இரவு ஆனந்தனின் அடுக்குமாடி வீட்டில் தங்கி அதிகாலையில் ஆனந்தமாய் புறப்பட்டோம். முற்றிலும் புதிய அனுபவம்.. மிக அருமையான, இயற்கையான, வழியற்ற வழிகளில், சேறும் சகதியும் நிறைந்த நீர்த்தடங்களில், சிவப்பு மண் நிறைந்த உயரமான, மிக தாழ்வான பகுதிகளில் ஓட்டப்பயணம்... வழியில் சுயமிக்களும், போட்டோக்களுமாய் அனுபவித்து ஓடினோம். சென்னையின் சுற்றுப்புறங்களில் இன்னும் உயிர்ப்போடு இருந்த சிறு கிராமங்களும், பச்சை வயல்வெளிகளும் நம் பால்யத்தை கண்களில் காட்டியது. நாங்கள் ஓடுவதை வியந்து பார்த்த பெருசுகள், கை தட்டி ஆர்ப்பரித்த இளசுகள், கை குலுக்கி, கை அசைத்து விடை தந்த குழந்தைகள் என பெரு மகிழ்வோடு பயணித்தோம். தொடங்கிய இடத்தை அடைய இன்னும் 4 கி.மீ எனும்போது ஏற்பட்ட சோர்வு .. “இதோ நெருங்கிவிட்டோம்.. வெறும் 4 கி.மீ தான்” என என்னை நானே தேற்றி ஓடிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் TomTom Watch 22.75 கி.மீ எனக்காட்ட .. என்ன இது சோதனை? 21.1 கி.மீ ல் முடித்திருக்கவேண்டுமே என பார்த்தபோதுதான் தெரிந்தது 42 கி.மீ பாதையில் ஓடிக்கொண்டிருப்பது. உச்சந்தலையில் சுல்லென்றது... வழியில் சுகமாய் எடுத்துக்கொண்ட ஐஸ் பாத்தெல்லாம் கொதித்தது.. மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடி, நடந்து ஒரு வழியாய் மீதி தூரத்தை கடந்தேன்... 21.1 கி.மீ க்கு ஓட்டத்திற்கு ஏறக்குறைய 24.5 கி.மீ ஓடியிருந்தேன்... TomTom கடிகார கணக்குப்படி 21.1 கி.மீ தூரத்தை 2:29:24 மணிகளில் முடித்திருந்தேன்.. பாதை மாறிய பயணத்தால் CTM கணக்கில் 2:57:17 என பதிவானது... குரு ஷான்ஜி கற்றுத்தந்த ஓட்டத்திற்கு பின்னான உடற்பயிற்சிகள் அன்றைய பாடங்கள்... காயங்கள் ஏதும் சுணக்கம் தராத சுகமான இந்த அனுபவத்தை அடுத்த ஆண்டு 42 கி.மீ ஓட்டத்தில் பங்கேற்கும் வரை மனம் அசைபோடும்... (நம்பிக்கை.. அதானே எல்லாம்..)
அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய வோடபோன் கோயம்புத்தூர் மாரத்தான்... செப்டம்பர் 30 அன்று காலை கிளம்பும்போது இதுநாள்வரை இல்லாமல் "எனது மனையாளும், மகன்களும் கை குலுக்கி வாழ்த்தி வழியனுப்ப.." உற்சாகத்தோடு புறப்பட்டேன். சனிக்கிழமை மதியம் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடி, அலைச்சலால் மதிய உணவை தவிர்த்துவிட்டேன். கொடீசியாவில் எனக்கும், சகோ துரைக்குமான "கிட்"டை பெற்று சகோ ஆனந்தன் மூலமாக தங்கும் அறையை அடைந்தபோது மணி மாலை 6:30.. இனி இரவு உணவில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒரு காபியோடு சகோ ஆனந்தனை வழியனுப்பினேன். இரவு உடுப்பு மாற்றி வெளியே சிறிது தூரம் நடக்கலாமே என்ற எண்ணத்தில் வ.உ.சி பூங்கா அருகில் ஒரு உணவகம் கண்டதும் இரவு உணவை முடித்துவிட்டு அறை திரும்ப முடிவு செய்தேன்.. இங்கு நான் செய்த தவறு நாளைய தினத்தை பாதிக்கும் என தெரியாமலே...(காரமான அசைவ உணவு). உண்டு முடித்து அறை திரும்பி, சீக்கிரமே உறங்கி நடு இரவில் வந்த சகோதரர் துரையை உள்ளிழுத்து மீண்டும் உறங்கி விழித்தபோது மணி அதிகாலை 4:00 .. அலாரத்திற்கு முன்பு சகோ ராஜ்குமாரின் போன்.. அறைக்கு வந்தவரை அமர வைத்து வேகவேகமாக தயாராகி ஓட்டம் நடைபெறும் இடம் நோக்கி ஓட்டமும் நடையுமாக...
சரியாக 5:00 மணிக்கு எனது 21.1 கி.மீ ஓட்டம் துவங்கும் என்பதால் அந்த பதற்றத்தில் ஹைட்ரேசன் பாட்டிலை நிரப்பாமல் வந்ததால் நிரப்ப ஓடினேன் தனியாக... நிரப்பியபின் வந்தால் திருவிழாவில் பிள்ளையை தொலைத்த கொடுமையாய்... சகோக்கள் ராஜ், துரை இருவரையும் காணவில்லை.. எனது செல்போன் அவர்களிடம்.. அந்த கடலில் இந்த மீன்களை கண்டுபிடிக்க முடியாமல் ... தேடினேன்.. தேடினேன்.. தேடிக்கொண்டேயிருந்தேன்... பலனில்லை... கடைசி நிமிடத்தில் சகோ ராஜ் 'பிள்ளையை கண்ட பெற்றவராய்' தேடி என்னைக்கண்டு எனது போனையும் வழியில் சாப்பிட ஸ்னிக்கரையும் தர இதையாவது பெற முடிந்ததே என்ற நிமிடத்தில் ஓட்டம் ஆரம்பமானது... முன்பு பேசிக்கொண்டது போலவே Pace 5:40 க்கும் குறைவாகவே ஓடிக்கொண்டிருந்தேன்... 14 வது கி.மீ வரை.. அடுத்த 2 கி.மீட்டர்களில் ஏற்பட்ட தொய்வை ஈடுகட்ட போராடவேண்டியிருந்தது. இரவு உண்ட உணவால் மீண்டும் 17, 18 கி.மீ களில் சுணக்கம்... சகோ ராஜ்குமாரின் அறிவுரை காதில் ஒலித்துக்கொண்டிருந்த இளையராஜாவின் சோக கீதத்தை விட வேகமாய் ஒலித்தது. "எதைப்பற்றியும் யோசிக்காமல் கடைசி 3 கி.மீ கண்ணைமூடிக்கொண்டு முடிந்தவரை வேகமாக, நிதானமாக ஓடுங்கள்". சொல்லியபடி அந்த தொலைவில் ஓடும்போது என்னைக்கடந்த நிறைய பேரை கடந்து ஓடினேன்... "ம்ம்ம்.. ஓடுங்க.. ஓடுங்க.. இன்னும் 50 மீட்டர்தான் " என்ற அசரீரியின் குரலால் இன்னும் வேகம் கூட்டி .... எல்லைக்கோட்டில் கால்வைத்தேன். இதுவரையில் எனது சிறந்த ஓட்ட நேரமாக "2:06" (முந்தைய சிறந்த நேரம் 2:19) அமைந்தது... இந்த எனது அரை மாரத்தானின் தனிப்பட்ட சிறந்த ஓட்டத்தை குரு ஷான்ஜிக்கு பிறந்தநாள் (அக்டோபர் 1 ம்தேதி) பரிசாக்கினேன். வெறும் காலில் ஓடி 10 கி.மீ தூரத்தை சிறந்த நேரத்தில் முடித்து நண்பர்களை மீட்டிக்கொண்டிருந்த 'ஓட்டத்தீவிரவாதி' ராஜ்குமாரையும், செவ்வனே முடித்த சகோ துரைஅரசு, தோழர் பார்த்தி, தம்பிகள் பிரசன்னா, கார்த்திக், சுதன், ஆனந்தன் மற்றும் இதர உள்ளத்தனைய உடல், சேலம் ரன்னர்ஸ், ஈரோடு ரோடு ரன்னர்ஸ் போன்ற குழு நண்பர்களையும் சந்தித்த மன நிறைவோடு அறை திரும்பினோம்.
இந்த அரை மாரத்தான் ஓட்டத்தில் நான் கற்ற பாடங்கள் :
★ முடியாதது முயலாதது மட்டுமே..
★ ஓட்ட நாளுக்கு முதல் நாள் அமைதியான உறக்கம், ஓய்வு..
★ முதல்நாள் இரவு உணவில் அசைவம், காரமான உணவுகளை தவிர்ப்பது..
★ மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே நன்றாக நீர் மற்றும் பழரசங்கள் உட்கொள்ளுவது.. ★ ஓடும்போது திட்டமிட்டு ஓடுவது.. மிதமான வேகத்தில் ஓடி வேகம் கூட்டுவது...
12 Nov 2017, ஸ்பைஸ் கோஸ்ட் மாரத்தான் (21k), கொச்சின்
கொச்சின் ஸ்பைஸ்கோஸ்ட் மாரத்தான் 2017..
இந்தியாவின் பெரியதும், காற்றின் ஈரப்பதம், வெட்கை அதிகமான மற்றும் மிக கடினமான மாரத்தான்.
இதில் ஓடி பயிற்சி பெற்றால் இந்தியாவின் எந்தவொரு மாரத்தான் போட்டிகளிலும் ஓடலாம் என அறிந்து நான், ராஜ் மற்றும் தமிழ்செல்வன் மூவரும் ராஜ்குமாரின் ஓட்டுதலில் அவரின் மகிழுந்தில் மகிழ்வான கொச்சின் பயணம்..
முதன்முறையாக மாநிலம் தாண்டிய ஓட்டம்..
ராஜ் மற்றும் தமிழ் முழு மாரத்தான்.. நான் அரை மாரத்தான்...
அறையில் தங்கி, தேவையான பொருட்கள் வாங்கி, இரவு உணவையும் முடித்துவிட்டு
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தொடங்கி வைத்த ஓட்டம் அமர்க்களமாய் ஆரம்பமானது.
சொன்னதுபோலவே கடினமான ஒன்று.. நல்ல அனுபவம்...
மூன்று கிலோமீட்டர் ஓடியதுமே 10 கிலோமீட்டர் ஓடியதுபோன்ற தாக்கம்.. கடலோரத்தில் நிறைய மேம்பால ஏற்ற இறக்கங்கள் , உப்பு கலந்த கடல் காற்று, வெக்கை என இந்த சூழல் மிக புதிது. உடலை உருக்கி எடுத்தது..
நிறைய இடங்களில் சிதிலமடைந்த பாதையும், நடுவில் திறந்துவிடப்பட்ட போக்குவரத்தும் இந்த ஓட்டத்தை சலிப்பாக்கியது.
ஒரு வழியாய் 21 கி.மீ 2 மணி 11 நிமிடத்தில் ஓடி முடித்துவிட்டு தசைதளர்வு பயிற்சிகளை முடித்து காலை உணவருந்த சென்றபோது அத்தனையும் இயற்கையான, அவித்த தானியங்கள் மற்றும் நமது தெற்கத்திய உணவுகளும்..
03 Dec 2017, விப்ரோ சென்னை மாரத்தான்(21k), சென்னை
★ ஓட்ட நாளுக்கு முதல் நாள் அமைதியான உறக்கம், ஓய்வு..
★ முதல்நாள் இரவு உணவில் அசைவம், காரமான உணவுகளை தவிர்ப்பது..
★ மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே நன்றாக நீர் மற்றும் பழரசங்கள் உட்கொள்ளுவது.. ★ ஓடும்போது திட்டமிட்டு ஓடுவது.. மிதமான வேகத்தில் ஓடி வேகம் கூட்டுவது...
12 Nov 2017, ஸ்பைஸ் கோஸ்ட் மாரத்தான் (21k), கொச்சின்
இந்தியாவின் பெரியதும், காற்றின் ஈரப்பதம், வெட்கை அதிகமான மற்றும் மிக கடினமான மாரத்தான்.
இதில் ஓடி பயிற்சி பெற்றால் இந்தியாவின் எந்தவொரு மாரத்தான் போட்டிகளிலும் ஓடலாம் என அறிந்து நான், ராஜ் மற்றும் தமிழ்செல்வன் மூவரும் ராஜ்குமாரின் ஓட்டுதலில் அவரின் மகிழுந்தில் மகிழ்வான கொச்சின் பயணம்..
முதன்முறையாக மாநிலம் தாண்டிய ஓட்டம்..
ராஜ் மற்றும் தமிழ் முழு மாரத்தான்.. நான் அரை மாரத்தான்...
அறையில் தங்கி, தேவையான பொருட்கள் வாங்கி, இரவு உணவையும் முடித்துவிட்டு
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தொடங்கி வைத்த ஓட்டம் அமர்க்களமாய் ஆரம்பமானது.
சொன்னதுபோலவே கடினமான ஒன்று.. நல்ல அனுபவம்...
மூன்று கிலோமீட்டர் ஓடியதுமே 10 கிலோமீட்டர் ஓடியதுபோன்ற தாக்கம்.. கடலோரத்தில் நிறைய மேம்பால ஏற்ற இறக்கங்கள் , உப்பு கலந்த கடல் காற்று, வெக்கை என இந்த சூழல் மிக புதிது. உடலை உருக்கி எடுத்தது..
நிறைய இடங்களில் சிதிலமடைந்த பாதையும், நடுவில் திறந்துவிடப்பட்ட போக்குவரத்தும் இந்த ஓட்டத்தை சலிப்பாக்கியது.
ஒரு வழியாய் 21 கி.மீ 2 மணி 11 நிமிடத்தில் ஓடி முடித்துவிட்டு தசைதளர்வு பயிற்சிகளை முடித்து காலை உணவருந்த சென்றபோது அத்தனையும் இயற்கையான, அவித்த தானியங்கள் மற்றும் நமது தெற்கத்திய உணவுகளும்..
03 Dec 2017, விப்ரோ சென்னை மாரத்தான்(21k), சென்னை
எனது_5வது_அரை_மாரத்தான்(21.1 கி.மீ)
இந்திய அளவில் இரண்டாவது பெரிய மாரத்தான்..
தென்னிந்திய அளவில் முதலாவது பெரிய மாரத்தான்-- விப்ரோ சென்னை மாரத்தான்...
மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த ஒன்று.. இதுவரை என்னோட பெஸ்ட் 2.04 நிமிடம் என்பதை 2.00 க்குள் முடிக்க முடிவு செய்திருந்தேன். இந்த எனது 5வது அரை மாரத்தானில் மட்டுமே அது சாத்தியம் என்பதால். ஏனெனில் எதிர்வரும் கொடைக்கானல் அல்ட்ரா, பாண்டி ஆரோவில் டிரையல், ஏற்காடு ஹில் அல்ட்ரா என எதிலும் நேர வரையறை கிடையாது.. ஆக நினைத்ததை முடிக்கும் முனைப்போடு இருந்தேன்.
காலையே கிளம்பி மதியம் 3.00 மணிக்குதான் சென்னை வந்து சேர்ந்த என்னை அழைத்து செல்ல காத்திருந்த தம்பி சையது உடன் கிளம்பி, தான் ஊரில் இல்லையென்றாலும் தன் அடுக்குமாடி வீட்டின் சாவியை சையது வசம் வழங்கி எனக்கு தங்கும் வசதி தந்த சகோ ஆனந்தனுக்கு முதல் நன்றி. அவ்வளவு பெரிய வீட்டில் தனியே அதுவும் சென்னையில் கொஞ்சம் பயத்தோடுதான் இருந்தேன். நன்றாக உறங்கி ஓய்வெடுத்து அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து தயாராகி 4.00 மணிக்கு வந்த சையது உடன் கிளம்பி 23 கி.மீ தூரத்தில் உள்ள நிகழ்விடம் அடையும்போது மணி 4.45.. இரண்டரை கி.மீ க்கு முன்னரே ரோட்டை அடைத்து பாதை மாற்றி விட்டதால் வேறு மார்க்கம் தெரியாமல் அங்கேயே வண்டியை பார்க் செய்து.. "எங்களது மாரத்தானை" அங்கேயே துவங்கிவிட்டோம்...
2.5 கி.மீ ஓடி தொடங்கும் இடத்தை அடைந்து தம்பி ராகுலிடம் பிப் வழங்கும் நேரத்தில் அரைமாரத்தானை ஆரம்பித்து விட்டனர்.. நேரம் சரியாக 5.00 மணிக்கு... 2.00 மணி பஸ்( 2 Hour Pacer) எங்கே என தெரியாமல் 2.30 பஸ்ஸை தொடர்ந்து அத்தனை கூட்டத்தில் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறி 2.15 பஸ்ஸை பின்னுக்கு தள்ளி முன்னே சென்றேன்.
அதாவது 2.00 பஸ்ஸுக்கும் 2.15 பஸ்ஸுக்கும் நடுவே. எப்படியாவது 2.00 மணிக்குள் முடிக்கவேண்டும் என்ற உந்துதல் வேறு.
முதல் 5 கி.மீ வழக்கமான எனது வேகத்தில் ஓட.. 6 வது கி.மீட்டரில் அடி வயிற்றில் லேசான வலி.. இருந்தும் சமாளித்து ஓடினேன். 12 வது கி.மீட்டரில் இருந்து பெரிய சோதனை காத்திருந்தது..(பள்ளிக்கரணை..OMR ரோடு) அந்த காலை வேளையில் அப்படி ஒரு துர்நாற்றம்.. குமட்டல்.. வாந்தி வரும் அளவுக்கு... மூச்சு விடவே ரொம்ப சிரமம். 13.5 கி.மீட்டரில் அடையாளம் தெரியாமல் முகமூடி அணிந்து ஓ(ட்)டிக்கொண்டிருந்த 5:30 பஸ்ஸின் டிரைவர் சகோ ராஜ்குமாரை பார்த்து ஹாய்..சொல்லி... 15 ஆவது கி.மீட்டரில் ஓடும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கழிவறை சென்று திரும்பிய 5 வது நிமிடம் வலதுபுற நெஞ்சின் கீழ் நுரையீரல் பகுதியில் வலி... மூச்சு விட முடியாமல்...
" அந்த வலி இருக்கும் பகுதியை அழுத்தி பிடித்து நன்றாக மூச்சை இழுத்து பலமுறை விடும்போது சகஜ நிலை திரும்பும்" என எங்கோ படித்ததை நினைவில் கொண்டு அவ்வாறே செய்ய.. பேக் டு நார்மல் மோட்..
ஆனால்... 18 கி.மீட்டரில் Sub 2 (2:00 மணியை தாண்டியிருந்தேன்) கனவு பணால்...
வேறென்ன செய்ய? சரி.. முடிந்தவரை முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் வேகமெடுக்க உடலும் ஒத்துழைப்பு தந்ததால் 2.09 மணி நேரத்தில் 21.1 கி.மீ கடந்தேன். இது எனது இரண்டாவது பெஸ்ட் டைமிங்காக (2.04 பெஸ்ட்) பதிவானது..
Volini Recovery Zone சென்று பிசியோதெரபிஸ்ட் மூலம் தசை தளர்வு பயிற்சி முடித்து.. அங்கு வழங்கப்பட்ட காலை உணவையும் முடித்தேன்... ஒவ்வொரு ஓட்டமும் இதுவரை ஒரு பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது... இதில் கொஞ்சம் அதிகம்....
ஓடும்பாதை தேர்வு, உணவு பற்றாக்குறை, மெடல் வழங்கிய பகுதி, இந்த அளவு கூட்டம் கூடும் என தெரிந்தும் தடுமாறியது என நிறைய சொதப்பல்கள்..
போட்டோ , வழியில் அழகாக நடனமாடி தப்பாட்டம் போட்டு அசத்திய நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மாணவர்கள், உதவி மையங்கள், அழகான மெடல், நிகழ்வின் முடிவில் வந்து மனதை தொட்ட நடிகர் சூர்யா என நிறைய நிறைகள்...
அடம்பிடித்து 50 கி.மீ ஐ மாற்றியிருந்தால் 108 க்கோ அல்லது நமது நட்புகளுக்கோ என்னை தூக்கிவரும் வேலையை கண்டிப்பாக வைத்திருப்பேன் என்பதை ஓடும்போதுதான் கணித்தேன்.
Shan JI : https://www.facebook.com/shanmugame/posts/10157174205429546
Rajkumar : https://www.facebook.com/RAJKUMAR11231/posts/1453253478106538
07 Jan 2018, முத்து மாரத்தான்(21k), கொங்கணாபுரம், சேலம்
எனது 6வது_அரை_மாரத்தான் – 2018 ம் ஆண்டின் முதல் மாராத்தான்
நானும்_பாஸாயிட்ட்டட்டேஏஏஏன்...!!!
எனக்கும் ஒரு கனவு இருந்தது... நீண்ட நாளாக.. அரைமாரத்தானை 2 மணிக்குள் (Sub 2) முடிக்கவேண்டும் என்று..நிறைய போட்டிகளில் முயற்சி செய்து திட்டமிட்டு ஓடியும் நேற்றுவரை நிறைவேறாமலே இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவதொரு காரணத்தால் தடையானது.
10 கி.மீட்டரை சாதாரணமாக 1மணிக்குள் (Sub 1) முடிக்கும்போது இது ஏன் இன்னும் சாத்தியப்படவில்லை என பலமுறை எனக்குள் கேள்விகள் எழுந்ததுண்டு. ஆனாலும் விடையில்லை. சரி.. நமக்கு அவ்வளவுதான் வரும்போல.. வயசாகுதுல்ல... என நினைத்து சமாதானமானேன்.
நம் குழுவில் வந்த பதிவு ஒன்று சேலம்மாவட்டத்தில் "முத்து மாரத்தான்" ... கடந்த 21ஆண்டுகளாக நடக்கிறது என்ற தகவலோடு.. ஏற்கனவே கத்துகுட்டி மாரத்தான்களில் கலந்துகொண்டு அடிபட்ட ஞாபகம் வர சகோ வினவினேன்.. உள்ளூரில் நடக்கிறது ..போகலாம் என மனசு சொல்லுது.. போகலாமா? என..
"நண்பர் ஒருவர் கூறினார்... இவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள்.. தாராளமாக பதிவு செய்யுங்கள்" என்று சொன்னதும்... நான் ஓடுவதை பார்த்து வாரம் ஒருமுறை என்னுடன் ஓடும் மதனகோபாலனை கேட்டேன்.. வர்றீங்களா? என.. ஓ... தாராளமாக என்றதோடு அல்லாமல் நானும் அரைமாரத்தான் ஓடுகிறேன்(அதிகபட்சம் 15 கி.மீ ஓடியிருக்கிறார்) என அதிர்ச்சியூட்ட இரண்டு பதிவுகள் செய்து...
இன்று அதிகாலை 3 மணிக்கு கடுங்குளிரில் இரண்டு சக்கர வாகனத்தில் சிலபல உடுப்புகளோடு கிளம்பி 70 கி.மீ கடந்து போட்டி நடக்கும் இடத்தை 4.45 மணிக்கு சேர்ந்தோம்.
போட்டி 6.20 க்கு என்றதும்.. அட இங்கும் அப்படித்தானோ? என்ற சந்தேகம். ஈரோடு நண்பர்களுக்காக காத்திருந்து அவர்கள் வந்ததும் அளவளாவி போட்டி துவங்கியதாக அறிந்து 5 நிமிடம் தாமதமாக ஓட ஆரம்பித்தோம்.
Sub 2 கனவை ஏற்கனவே மூட்டைகட்டி வைத்ததால் எந்த திட்டமிடலும் இல்லாமல் மெதுவாகவே ஓட ஆரம்பித்தேன்.
அருமையான ஓட்டப்பாதை... நல்ல சீதோஷ்ணநிலை.. முதல் கிலோமீட்டரை மெதுவாக ஓடும்போது சாலையின் நேர்த்தி பிடித்ததால் நண்பரை மெதுவாக வரச்சொல்லி நான் வேகம் கூட்டினேன். வழிநெடுக நடத்துனர் குழுவின் உதவிமையங்கள் அல்லாது பொதுமக்களும் அவரவர் இல்லங்களுக்கு முன்னால் ஆர்வமாக உதவி வழங்கிக்கொண்டிருந்தார்கள்... சிறு குழந்தைகள், பெரியவர்கள் அளித்த உற்சாக வெள்ளம்.. வியப்போடு ஓடினேன்.
10 கி.மீ-ஐ 55 நிமிடத்தில் கடந்ததும் லேசாக நப்பாசை ஏன்..Sub 2க்கு முயற்சிக்கக்கூடாது ? என்று... இதுவரை முடியாததை இன்று முடிக்க வாய்ப்பு இருப்பதாக மனதில் பட்டது.. ஓடினேன்... நேரத்தையும் உடல்மொழியையும் கவனித்து ஓடினேன். சோர்வானபோது உடன்கொண்டு சென்ற உப்பு எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு முழு அளவில் முயற்சித்தேன்.. 20 கி.மீ கடந்தபோது 2 மணிக்கு இன்னும் 10 நிமிடம் இருப்பது கண்டதும் சோர்ந்த உடல் புத்துணர்வு பெற்றதால் என்னை நானே உற்சாகப்படுத்தி இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தேன்..
21.1 கி.மீ கடந்து எல்லையை 2.00 மணிக்குள் தொட்டபோது என்னையும் அறியாமல் துளிர்த்த ஒரு துளி கண்ணீருக்கு எந்த சமரசம் செய்தாலும் தகும்.. இதுவரை பெற்ற பதக்கங்களை விடவும் இந்த பதக்கம் சிறியதாய் இருந்தாலும் சிறந்ததாய் தெரிந்தது.. என்னாலும் முடிந்தது... இதுவே எனது தனிப்பட்ட சிறந்த நேரமாகவும் (1:57:21 – Sub 2) பதிவானது.
நண்பர் மதனும் 3.15 மணியில் முடித்து தனது முதல் மாரத்தான் அனுபவத்தையும், பதக்கத்தையும் பெற்றார். நண்பர் நந்தகுமார் தனது முதல் மாரத்தானை (11 k) சிறப்பாக முடித்தார். வழக்கம்போல நட்பு பரிமாற்றம், அளவளாவல், காலை சிற்றுண்டி முடித்து இல்லம் சேர்ந்ததும்... இல்லாளின் பாராட்டு புன்னகை...
கடந்த டிசம்பர் 31 முதல் நான் எடுத்திருந்த 10 x 10 K (தினமும் 10 கி.மீ 10 நாளைக்கு) -ம், மேம்பால ஓட்டமும் இதற்கு பெரிதும் உதவியாக இருந்தது என்றால் மிகையில்லை. எனவே முறையாக, தினந்தோறும் பயிற்சி இருந்தால் எதுவும் சாத்தியம்... எல்லோராலும் சாத்தியம்... நன்றி...
21.01.2018, சேலம் மெகா மாரத்தான் ...
மகனோடு ஒரு ஓட்டம் ...
இன்று சேலத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான மாரத்தான் போட்டியில் "எப்படியாவது 10 கி.மீ ஓடி முடிக்கிறேன்" என்ற எனது 12 வயது மகனோடு நானும்... முதல்நாள் மாலை பதிவு செய்து மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கிளம்பி... உணர்ச்சிகரமான ஓட்டம்... ஏதோ அவ்வப்போது இரண்டு, மூன்று கி.மீ பள்ளியில் ஓடிக்கொண்டிருந்தாலும் ... இது தூரம் அதிகம் என்பதால் நான்தான் பயந்துகொண்டே அவ்வப்போது நண்பரின் துணையோடு கண்காணித்துக்கொண்டே ஓடினேன்... நடுவழியில் ஏதாவது தொந்தரவு என்றால்...? ஆனாலும் தன்னம்பிக்கையோடு 1 மணி நேரம் 20 நிமிடத்தில் வெற்றிகரமாக ஓடி முடித்தான்.. அவனுக்கு முதல் மாரத்தான்.. முதல் 10 கி.மீ.. எனது மகனோடு நான் ஓடிய முதல் மாரத்தான்...அவன் வாங்கிய மெடலையும், சான்றிதழையும் அதனால் அவனடைந்த சந்தோஷத்தையும் பார்த்து... ஹேப்பி.. "மகனே..."
27 Jan 2018, கொடைக்கானல் மலை அல்ட்ரா (21 k), கொடைக்கானல்
21.01.2018, சேலம் மெகா மாரத்தான் ...
மகனோடு ஒரு ஓட்டம் ...
இன்று சேலத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான மாரத்தான் போட்டியில் "எப்படியாவது 10 கி.மீ ஓடி முடிக்கிறேன்" என்ற எனது 12 வயது மகனோடு நானும்... முதல்நாள் மாலை பதிவு செய்து மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கிளம்பி... உணர்ச்சிகரமான ஓட்டம்... ஏதோ அவ்வப்போது இரண்டு, மூன்று கி.மீ பள்ளியில் ஓடிக்கொண்டிருந்தாலும் ... இது தூரம் அதிகம் என்பதால் நான்தான் பயந்துகொண்டே அவ்வப்போது நண்பரின் துணையோடு கண்காணித்துக்கொண்டே ஓடினேன்... நடுவழியில் ஏதாவது தொந்தரவு என்றால்...? ஆனாலும் தன்னம்பிக்கையோடு 1 மணி நேரம் 20 நிமிடத்தில் வெற்றிகரமாக ஓடி முடித்தான்.. அவனுக்கு முதல் மாரத்தான்.. முதல் 10 கி.மீ.. எனது மகனோடு நான் ஓடிய முதல் மாரத்தான்...அவன் வாங்கிய மெடலையும், சான்றிதழையும் அதனால் அவனடைந்த சந்தோஷத்தையும் பார்த்து... ஹேப்பி.. "மகனே..."
27 Jan 2018, கொடைக்கானல் மலை அல்ட்ரா (21 k), கொடைக்கானல்
எனது முதல் அல்ட்ரா அனுபவம்
(அல்ட்ரா - மலைப்பகுதியில் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பாதை மற்றும் காடுகளில் ஓட்டம்) இத்தனை "விறுவிறுப்பாக" இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. 21கி.மீ பதிவு செய்திருந்த நான், நண்பர்கள் சிலர் 50 கி.மீ ஓடுகிறார்கள் என்பதால் நாமும் 50 கி.மீ ஓடலாமே என்ற நப்பாசை ஒரு பக்கம் (இன்னும் முழு மாரத்தான் முடிக்கவேயில்லை என்றாலும்கூட) . அனுபவசாலிகளின் அறிவுரையை ஏற்று 21 கி.மீ தொடர முடிவெடுத்தேன்.
(அல்ட்ரா - மலைப்பகுதியில் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பாதை மற்றும் காடுகளில் ஓட்டம்) இத்தனை "விறுவிறுப்பாக" இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. 21கி.மீ பதிவு செய்திருந்த நான், நண்பர்கள் சிலர் 50 கி.மீ ஓடுகிறார்கள் என்பதால் நாமும் 50 கி.மீ ஓடலாமே என்ற நப்பாசை ஒரு பக்கம் (இன்னும் முழு மாரத்தான் முடிக்கவேயில்லை என்றாலும்கூட) . அனுபவசாலிகளின் அறிவுரையை ஏற்று 21 கி.மீ தொடர முடிவெடுத்தேன்.
ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து அனுப்பிய மெயிலில் குளிர் பற்றிய பதிவு சற்று பயம் தந்தது உண்மைதான்.. அதிகாலை வேளையில் 5°க்கும் குறைவாக இருக்கும் என்பதால்.
வெள்ளிக்கிழமை காலை கிளம்பி மாலை கொடைக்கானல் அடைந்து 'கிட்' வாங்கும்போது ஜெர்கின், தொப்பி, காதுகளை மறைத்து ஸ்கார்ப் அணிந்திருந்தும் உள் உறுப்புகள் குளிரால் தடதடத்தன. கிட்டத்தட்ட உறைபனி.. ஆரம்பமே பெரும் அமர்க்களம்... இரவு உணவுக்கு ஹோட்டலில் கைகழுவ தண்ணீரை திறந்ததும் ஏதோ கடித்தது போன்ற உணர்வு.. வேறென்ன? குளிர்ந்த நீர்...
உறக்கம்.. 3 கம்பளி போர்வைகள் போர்த்தியும் காலையில் என்ன நடக்குமோ? என்ற எண்ணத்தில் அரைகுறை தூக்கம். நண்பர்கள் ராஜ் மற்றும் தமிழ் இருவரும் 50 கி.மீ என்பதால் அவர்கள் எழுந்தபோதே நானும் எழுந்து தயாரானேன். கடமையாற்ற சென்ற இடத்திலும் கடுங்குளிரால் சிக்கல்..
ஒருவாறாக 4.45 மணிக்கு அவர்கள் கிளம்பியதும் நான் கிளம்பவேண்டிய 5.40 மணிக்காக காத்திருந்து, கிளம்பி ஓட்டம் தொடங்கும் இடம் அடைந்தபோது இதுவரை என் வாழ்நாளில் நான் இந்த நேரத்தில் அனுபவிக்காத, காணாத குளிர்..
"இது உனக்கு தேவையா?" என்ற கேள்வியும் கூடவே...எழுந்ததை தவிர்க்க இயலவில்லை.
எனக்கே இப்படி என்றால் 5 மணிக்கே ஓடத்துவங்கிய நட்புகளின் நிலையை எண்ணிப்பார்த்து என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.
நடுவில் "பிப்"(BIB) ஐ மறந்து காரில் விட்டதால் அந்த நேரத்திலும் பரபரப்பு... கடைசியில் 'பிப்' அணிந்து களத்தில் நுழையவும் திரு.சைலேந்திரபாபு கொடி அசைக்கவும் சரியாக இருந்தது. சரியாக 6 மணிக்கு ஓட்டம் துவங்கியது.. எந்த ஸ்ட்ரெட்ச், வார்ம் அப் இல்லாமல் (அதன் விளைவு ஓடும்போது நன்றாகவே தெரிந்தது) ஓட ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் என் வாயிலிருந்து ரயில்(ஆவி) ஓடியது. ஈரப்பதம் நிறைந்த காற்றை சுவாசிக்க மிகுந்த சிரமம். இரண்டாவது கி.மீட்டரிலேயே அல்ட்ரா ஓட்டம் என்றால் என்ன? எப்படி இருக்கும்? என்பது "நன்கு" தெரிந்தது. அடிக்கடி மேம்பால ஓட்டம் ஓடி பயிற்சி எடுத்து இருந்தாலும் இந்த பாதையில் ஓடிய(ஓடி ... ம்ஹூம்... நடந்த... தவழ்ந்த) போது 'இந்த பயிற்சி உனக்கு போதாது தம்பி..!' என பாதை பல்லைக்காட்டியது.
ஆனாலும் என்னைப்போல் தவழ்ந்த நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டே... நட்பு பரிமாறி.. இணைந்தே ஓடும்போதுதான் தெரிந்தது... அவர் நம்மூர்காரர் என...
சாதாரண பாதையில் ஓடுவதைவிட இரண்டு மடங்கு கடினமாக இருந்தது. முடிந்தவரை அனைத்தும் தார்சாலைகளாக இருந்ததால் காடுகளுக்குள் செல்லும் அவசியம் ஏற்படவில்லை. இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. இத்தனை தூரம் கடந்தும் உடல் சூடு இல்லை.. வியர்வை இல்லை. கைகள் மரக்கட்டைகள் போல விறைத்து போனது. எதை எடுத்தாலும் உணர்வில்லை. மூக்கில் ஆறாய் பெருகிய சளியை சிந்தி துடைக்க வைத்திருந்த கைக்குட்டை தானாக அடிக்கடி கைநழுவியது. இமைக்க இயலாத வலது கண்ணிற்கு தேவையான உயவு சொட்டு மருந்தை எடுத்து செல்லாததால் கண்ணில் ஏற்பட்ட வலி உடலிலும் பரவி.. எங்கே பார்வைக்குறை ஏற்பட்டு விடுமோ? என்ற பயம் ஓடும் வலியைவிட பெரிதாக. காட்டு மரங்களை தாண்டி அங்கங்கே சூரியபகவான் கருணை காட்டியதும் சிறிய உற்சாகம். அங்கங்கே நின்று புகைப்படங்கள்... நாங்கள் ஓடியது கொடைக்கானலின் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் வழியாக.
ஓட்டத்தை 4 மணி நேரத்திற்குள் நிறைவு செய்யவேண்டும். முடியுமா? என்ற சந்தேகம் வராமலில்லை. உதவிமையங்கள் சரியான இடைவெளியில் இருந்ததால் அவ்வப்போது முடிந்ததை எடுத்துக்கொண்டு ஓடினோம். இங்கு உதவி மையங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த தன்னார்வலர்கள் விடியவிடிய கூடாரம் அமைத்து, காட்டில் நடமாடும் சிறு விலங்குகளுக்கு மத்தியில், முக்கியமாக மனிதர்களால் கண்டதையும் கொடுத்து பழக்கியதால் தங்களது சுயத்தை தொலைத்து , போவோர் வருவோர் வைத்திருக்கும் திண்பண்டங்களை திருட மனிதர்களையே தாக்கும் குரங்குகளுக்கு நடுவில் கடுமையான குளிரில் நெருப்பு மூட்டிக்கொண்டு, ஓடியவர்களுக்கு உதவியதை நினைத்து பார்க்கையில் ... உண்மையில் உடம்பு சிலிர்த்தது. 16 வது கி.மீட்டரை 2 மணியில் கடந்ததும் ஒரு நம்பிக்கை.. 3 மணிநேரத்தில் முடிக்கலாம் போல தெரிந்ததால் அதற்கு பிறகு வந்த செங்குத்தான இறங்கு பாதைகளில் கவனமாக சறுக்கி விடாமல்.. சிறிது சறுக்கினாலும் பள்ளத்தில் உருளும் அபாயம் இருந்ததால் மெதுவாக அதேநேரம் கவனமாக இறங்கி ஓட... முடிவில்.. 2:27:05 (2:40 official) மணியில் நிறைவு செய்தேன்...
என்னை இன்னும் செம்மைப்படுத்த இந்த ஓட்டம் நிறைய நல்ல பாடங்களை கற்றுத்தந்தது. ஊரில் இரண்டு முக்கியமான நிகழ்வுகளை தவிர்க்க இயலாமல் தவி(ர்)த்து முன்னமே திட்டமிட்ட இந்த முதல் அனுபவத்தை தேடி வந்ததில் கிடைத்தது பேரனுபவம்.
இந்த அசாதாரணமான சூழலில் இத்தகைய ஓட்டங்களை முடிக்கும் வகையில் நம் உடலை நாம் மாற்றும்போது கிடைக்கும் தன்னம்பிக்கை எந்த சூழலிலும் நம்மை ஓட வைக்கும் என்பது உறுதி. ஓட்டத்தை விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் இது போன்ற சூழலில் ஒரு முறையாவது ஓடிப்பாருங்கள்... நல்ல அனுபவங்கள் பல உங்களுக்காக காத்திருக்கும்.
அசால்ட்டாக 50 கி.மீட்டரை 7 மணி நேரத்திற்கு முன்னதாக முடித்த ராஜ் மற்றும் தமிழ், 8 மணிக்குள் முடித்த குரு ஷான்ஜி ஆகியோரிடமிருந்து வரப்போகும் பதிவுகள் இன்னும் நமக்கு பல சங்கதிகள் சொல்லும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை...
Rajkumar : https://www.facebook.com/RAJKUMAR11231/posts/1453253478106538
மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்... தவிர அதிகாலை 3 மணிமுதலாக 80 கி.மீ, 130 கி.மீ ஓடிக்கொண்டிருந்த தெய்வங்களையும் (மனிதர் உணர்ந்துகொள்ள... அவர்கள் மனிதப்பிறவிகளே... அல்ல... அல்ல்ல்ல... அல்ல்ல்ல... - குணா குகை வழியாக ஓடிய எஃபெக்ட்) வாழ்த்துவோம்.
வழக்கம்போல் குழு அளவளாவல்... புகைப்படங்கள்...
நிகழ்வை நினைவுகளில் நிறுத்த புகைப்பட நிபுணராக வருகை தந்து வளைத்து வளைத்து சுட்ட ராகுலோடும், ராஜ், தமிழ் மற்றும் குருஜியோடும் ஏற்பாட்டாளர்கள் வழங்கிய அருமையான மதிய உணவு அருந்தி விடைபெற்றோம்..
11 Feb 2018, ஆரோவில் (மாரத்தான்)அனுபவங்கள்... (21k), பாண்டிச்சேரி
11.02.2018 தேதி நெருங்கியதும் பாண்டியில் தங்க இடம் தேட ஆரம்பித்தோம். வார இறுதி என்பதாலும் மாரத்தான் நிகழ்வு இருந்ததாலும் அனைத்து தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் பெரும்பாலும் முடிந்திருந்தன. இருந்த ஓரிரண்டும் நம் பட்ஜெட்டுக்கு ஒவ்வாதவை.
நமது U2 டீ-சர்ட் அனுப்ப விலாசங்கள் தயாரித்தபோது ஏதோவொரு பாண்டி விலாசம் இருந்தது போல ஞாபகம் இருந்ததால் தேடிப்பார்த்ததில் அவர் நம்ம உள்ளத்தனைய உடல் குழும நண்பர் வரதராஜுலு. அவரின் தொலைபேசி எண் இருந்ததால் தொடர்பு கொண்டேன். வருமானவரித்துறை அலுவலராக இருந்தும் நேரம் ஒதுக்கி, தேடி அவரது நண்பரின் ஒத்துழைப்போடு அழகான, அருமையான, குறைந்தவாடகையில் 11 பேர் தங்கும் வகையில் குளிரூட்டப்பட்ட Dormitory ஒன்றை ஏற்பாடு செய்து தந்தார். பாண்டி வந்துசேர்ந்ததும் அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்துசென்று தங்கும் இடத்தையும் காட்டி, ஆரோவில் வரை அழைத்துச்சென்று உதவியதை மறக்க இயலாது. இதற்குமுன் அவரை பார்த்ததும், பேசியதும் இல்லை. U2 வழி தொடர்பு மட்டுமே. நடுநடுவே விசாரிப்புகள் வேறு. மனமார்ந்த நன்றிகள் வரதராஜு சார்.
பதிவு செய்யும்போதே ராஜ் சொன்னார்.. மற்ற நாட்களில் ஆரோவில்லில் பொதுமக்களை அனுமதிக்க மாட்டார்கள் எனவும், இதுபோன்ற நிகழ்வு நடைபெறும்போது உள்ளே சென்று பார்க்கலாம் என்று..
நம் தமிழ்நாட்டில், பாண்டிச்சேரியில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா? என வியப்பின் உச்சிக்கே கொண்டுசென்ற இடம்... பிப்(Bib) வாங்க சென்றபோதே பார்த்து வியந்தேன். நண்பர் பூபாலன், இந்தியாவின் முதல் இரும்புப்பெண் ஈஸ்வரி, முரளி கிருஷ்ணன் மற்றும் தமிழ்செல்வன் அவரின் நான்கு நண்பர்கள் என ஒன்பது பேராய் அறை திரும்பி ஓய்வெடுத்து உண்டு உறங்கினோம்.
அதிகாலை 5.00 மணிக்கு கிளம்பி ஓட்டம் தொடங்கும் இடத்தை அடைந்து நிதானமாக சில பயிற்சிகள் செய்து தயாரானோம். 6.15 மணிக்கு ஓட்டம் தொடங்கியது. மிக மெதுவாக, ரசித்து, சுற்றுசூழலை அனுபவித்து ஓட முடிவு செய்திருந்ததால் அவ்வாறே தொடங்கினோம். சிமெண்ட் கற்கள் பதித்திருந்த சாலைகளிலும், கச்சிதமான மண் ரோடுகளிலும் ஓட.. ஓட மனதில் உற்சாகம். நிறைய்ய்ய்ய வெளிநாட்டு மக்கள் வேறு.
உதவிமையங்கள் தேவையான இடங்களில் நிறைவாக...
ஓடும்போதுதான் கவனித்தோம்... மனிதர்கள் அளவுக்கு பெரிய நாய்கள், சிறிய நாய்கள் எந்த இடையூறும் செய்யாது ஓட்டத்தை வேடிக்கை பார்த்தன.
மனிதன் ஆதி காலத்திலிருந்து அதிநவீனம்வரை சென்று வெறுத்து மீண்டும் ஆதிகாலம் நோக்கி திரும்புவது போல் தோன்றியது.. ஆம்.. வெளிநாட்டவர்கள் பலர் பல இடங்களில் இயற்கையான சூழலில் மூங்கில் வேலி அமைந்த வீடுகளில் தோட்டத்தோடு வாசம். அவர்களின் சைக்கிள் பயணம், ஓடுபாதை ஓரமாக வசிப்பவர்கள் தாங்களே உதவிமையங்கள் அமைத்து உதவியது, வயதில் தோராயமாக 90ஐ தொடுபவர்கள், குழந்தைகள் என கைதட்டி வாழ்த்தி உற்சாகப்படுத்தியது என மனதை தொட்ட சம்பவங்கள் நிறைய..
குறைந்த வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தவனை ஆன்டனி என்ற சுனாமி இழுக்க குழுவாக ஓடிக்கொண்டிருந்த அவர்களை ஆன்டனியோடு பேசியவாறே தொடர்ந்தேன். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் 60 வயதை தொட்ட திருமதி ராதா மேடம் தான் ஆன்டனி குழுவிற்கும் பயிற்சியாளராம். ஒரு பெண் பயிற்றுனரை தொடர்ந்து 10 ஆண் ஓட்டக்காரர்கள். சிறிதும் சளைக்காமல் நூல்பிடித்தாற்போல் அருமையாக ஓடிக்கொண்டிருந்தார். அவரை தொடர்ந்து நானும்.
ஒரு கட்டத்தில் 10 கி.மீ ஓடுபவர்களும் உடன் ஓடி வர அந்த குறுகலான பாதைகளில் கொஞ்சம் நெரிசல். ஆனாலும் நெருக்கடியில்லாமல்..
அடர்ந்த பசுமையான காடு, சிறு சிறு ஒத்தையடி மண்பாதைகள் என கிராமப்புறத்தில் ஓடியது போன்ற உணர்வு... அமைதியான ரம்மியமான இடங்கள்...
21 கி.மீ தூரத்தை 2:27 மணிகளில் கடந்தேன்.
நண்பர்களுக்காக காத்திருக்கும்வேளையில் உள்ளத்தனைய உடல் நட்புகள், சேலம் ரன்னர்ஸ் குழு நண்பர்கள் என நிறைய நட்புகளை காண நேர்ந்ததில் மகிழ்ச்சி.
அருமையான ருசியான வேண்டிய அளவு வழங்கப்பட்ட பிரமாதமான காலை உணவு...
பிறகென்ன..? வழக்கம்போலவே செல்பிக்கள், போட்டோக்கள் என சிறப்பான ஒரு காலைப்பொழுதானது.
U2 டீ-சர்ட் அணிந்து ஓடிய தம்பி சதீஸ் வழியில் அதை பார்த்து கிடைத்த பாராட்டுகளாலும் வாழ்த்துகளாலும் பூரித்து போயிருந்தார்..
மீண்டும் அறைதிரும்பி குளித்து நட்புகளோடு நிறைய அளவளாவி அவரவர் திசையில் விடைபெற்று திரும்பினோம்..
மொத்தத்தில் பதிவு செய்து இந்த சூழலில் ஓட இயலாதவர்களுக்கும், பதியாதவர்களுக்கும் பெரிய இழப்புதான் என்னைப்பொறுத்தவரையில்...
ஆரோவில் மாரத்தான் 2018 ஓடி முடித்தவர்களுக்கு வழங்கப்பட்ட மெடல் போன்ற அழகிய நினைவுப்பரிசும் மனதைவிட்டு அகலாது..
ஏற்பாட்டு குழுவினருக்கு மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளும்..
18 Feb 2018, ஏற்காட்டில் ஒரு மலையோட்ட(மாரத்தான்) அனுபவம்... (25k), ஏற்காடு
ஒவ்வொரு ஓட்டமும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை நமக்கு கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. அந்த வகையில் இந்த ஓட்டமும் சில நல்ல அனுபவங்களை கொடுக்கத்தவறவில்லை.
நான் சார்ந்த அரிமா சங்கத்தில் மண்டலம் சார்ந்த விழா 18.02.2018 அன்று நடைபெற இருந்ததால் அதில் எனது பங்களிப்பாகவும் சில பணிகள் இருந்ததால் அதற்கான பூர்வாங்க வேலைகள் கடந்த ஒரு மாதகாலமாக நடந்துவந்தது. அத்தனையும் விரைந்து முடித்தாலும் கடைசி நிமிட பரபரப்பையும் தவிர்க்க இயலவில்லை. (வண்டிக்கு பெட்ரோல் போட்டு பணம் கொடுக்க பார்த்தால் பர்ஸை காணோம். நேரமான அவசரம், பதட்டத்தில் அலுவலகத்திலேயே வைத்துவிட்டு வந்ததால் மீண்டும் வந்த வழியே 15 கி.மீ பயணித்து ... பணம் செலுத்தி...) மேலும் விழாவில் காலை முதலே இருக்கவேண்டிய அவசியமும் கூட. ஆனாலும் சிறப்பு அனுமதி பெற்று 17.02.2018 மாலை 5:00 மணிக்கு எனது இருசக்கர வாகனத்திலேயே (ஆக்டிவா) கிளம்பி கோவையிலிருந்து சேலம் வந்திருந்த நண்பர் தமிழை அழைத்துக்கொண்டு ஏற்காடு மலைப்பகுதியில் பயணம். பாதி தூரம் வரை குளிர் இல்லை.. மலை உச்சியை தொடும்போது வயிற்றின் உள் உறுப்புகள் லேசாக போட்ட தாளத்தை அறிய முடிந்தது.
சேலம் ரன்னர்ஸ் இந்தியா நடத்தும் முதலாவது மலையோட்டம்... குறைந்த அளவிலான பதிவுகளோடு...
7.00 மணி வரை மட்டும் BIB வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வழிதெரியாமல் சில வட்டம், சதுரமெல்லாம் போட்டு இடத்தை அடையும்போது 8:00 மணி. போனில் இணையம், சிக்னல் இல்லாததால் இத்தனை அசௌகரியங்கள். 50 கி.மீ ஓட்டத்திற்கு வந்திருந்த தமிழின் BIB ல் சிறு குழப்பம் நிலவ அதை தற்காலிகமாக சரிசெய்து BIB ஐ பெற்றுக்கொண்டு அங்கேயே இரவு உணவும் உண்டு அறை திரும்பினோம். பின்புதான் உணர்ந்தோம்.. நாளைய ஓட்டத்திற்கு முன் எடுத்துக்கொள்ள எதுவும் வாங்காமல் வந்ததை.. மீண்டும் அந்த குளிரில் 3 கி.மீ பயணித்து வாழைப்பழம், கடலை மிட்டாய், தண்ணீர் பாட்டில் வாங்கி அறை திரும்பி படுக்க மணி பத்தானது.
அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து தயாராகி 50 கி.மீ ஓடத்தயாரான தமிழ் கூடவே நானும் செல்ல முடிவெடுத்து 4:55 போட்டி தொடங்கும் இடத்தை அடைந்தோம். சரியாக 5:00 மணிக்கு 50 கி.மீ ஓட்டம் தொடங்கியது. எனது 25 கி.மீ ஓட்டம் 6:00 மணிக்கு என்பதால் அங்கேயே காத்திருந்தபோதுதான் கவனித்தேன்.. அங்கேயே ஹைட்ரேஷன் பாயிண்ட் ... காபி, கடலை பர்பி, வாழைப்பழம், சுடுநீர், எலுமிச்சை, உப்பு, ஆரஞ்சு, அவித்த உருளைக்கிழங்கு, தர்பூசணி, சாக்லேட், தண்ணீர், எனர்சால் கலந்த தண்ணீர் என அனைத்து பொருட்களுடன்...
வேண்டியதை வேண்டிய அளவு எடுத்துக்கொண்டு 5:40 க்கு தொடங்கிய வார்ம்அப், ஸ்ட்ரெச்சஸ் பயிற்சிகளை திரு.கே (Kay's Fitness Academy) அவர்கள் செய்ய நாங்கள் தொடர.. மணி 5:59:50 ல் கவுன்டவுன் தொடங்க... சரியாக 6:00 மணிக்கு ஓட்டம் ...
உற்சாகமாய் துவங்கிய ஓட்டத்தில் 500 மீட்டர் கடந்ததும்தான் நினைவுக்கு வந்தது... ஹைட்ரேஷன் பாட்டிலை மறந்து பைக்கில் வைத்ததை... 5 கி.மீ க்கு ஒரு உதவிமையம்தான் இருக்கும் என்பதால் லேசான பயமும் கூட... ஆனாலும் தொடர்ந்தபோது முதலாவது உதவிமையத்தில் ஏதும் எடுக்காமல் ஓடினேன்... சிறிது தூரம் கடந்ததும் தவறு செய்து விட்டது போல் தோன்றியது... தண்ணீராவது குடித்திருக்கலாம்... சரி அடுத்து 10 வது கி.மீ ல் பார்த்துக்கொள்ளலாம் என தொடர்ந்தேன். விடிந்தும் விடியாத அந்த காலையில் ஓரளவு வேகத்தோடு ஓடிக்கொண்டிருந்தபோது அடுத்த இரண்டாவது கி.மீ ல் தடையாய் 6 நாய்கள்.. முன்னேயும் பின்னேயும் 500 மீ தொலைவுக்கு மக்கள் யாருமில்லை.. அத்தனை நாய்களும் சேர்ந்தால் இருக்கும் கொஞ்சம் சதையையும் இழக்க வேண்டியதுதான்.. கையிலிருந்த சிறிய டார்ச் லைட்டை போட்டும் அணைத்தும் மெதுவாக அசைந்து அசைந்து நகர்ந்தேன்.. ஆனாலும் ஒரு நாய் நான் ஒரு அடி நகர்ந்தால் அது இரண்டடி எனை நோக்கி முன்னேற... ஒரு வழியாக சமாளித்து நகர்ந்தேன்... இரண்டாவது ஹைட்ரேஷன் பாயிண்ட்-ல் தண்ணீர், எனர்சால் என ஓரளவு எடுத்துக்கொண்டேன். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து, ஒவ்வொன்றாக.. வேண்டுமா? எனக்கேட்டு, ஹைட்ரேஷன் பாட்டில் இருந்தால் நிரப்பி தரட்டுமா? என கேட்டு கேட்டு உதவினர் அங்கிருந்த தன்னார்வலர்கள்... மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்...
இதுவரையில் ஓடிக்கொண்டிருந்த பாதை ஒரே இறக்கமாகவே இருந்தது.. கொடைக்கானலைவிட எளிதாய் இருக்கும்போல... என நினைத்ததுதான் தாமதம்... 13 வது கி.மீ- ல் இருந்து ஆரம்பமானது ஏற்றப்பாதை... அதுவரை இறக்கமாகவே 'ஓடியதற்கு' மாறாக நடந்து ஏறவேண்டிய சூழல்... மூன்றாவது உதவி'மய்யத்தில்' நமது U2- ல் புதிதாக இணைந்த திருமதி.பூர்ணிமா, ஏற்கனவே உறுப்பினராக உள்ள சேலம் ரன்னர்ஸ் இந்தியா தலைவர் திரு.கார்த்திகைகுமார் தன்னார்வலர்களாக... வேண்டியது வேண்டிய அளவுக்கு மேல்... முக்கியமாக இனிப்பு தேங்காய் பிரட்.. விட்டால் காலை சிற்றுண்டி அங்கேயே முடிக்கும் அளவிற்கு... வகைக்கு ஒன்றாய் ருசித்து களைப்பு, தாகம் தணித்து மீண்டும் "நடந்தோம்".. அந்த உயரத்தில் எங்கே ஓடுவது...? சரியாக 1 கி.மீ க்கு அப்பால் ஒரு வளைவான சாலையோரம் இரண்டு காட்டெருமைகள்... நானும், ஓடும்போது அறிமுகமான ஓசூரை சேர்ந்த ஸ்யாமும்... நல்லவேளையாக ஒரு லாரியின் சத்தம் கேட்டு இரண்டு காட்டெருமைகளும் காட்டிற்குள் ஓடியதால் நாங்கள் ரோட்டின் மேல் ஓட முடிந்தது...
அதன்பின் வந்த மலைப்பாதை மலைக்க வைத்தது. ஏற்றம்... ஏற்றம்... ஏற்றம்... 20வது கி.மீ-ல் "கடை" (உதவி மய்யம்) விரித்திருந்த சேலம் ரன்னர்ஸ் நண்பர் வெற்றியை கண்டு பேசி, தேவையானவற்றை எடுத்துக்கொண்டு ஓடியபோது ஏற்பட்ட சோர்வு... 21 கி.மீ-ஐ கடந்து ஓடுகிறோம் (இதுவரை எனது அதிகபட்ச தூரம் 22.8 கி.மீ) என்றபோது மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்வாலும் அதனால் ஏற்பட்ட புத்துணர்வாலும் களைப்பையும் சோர்வையும் களைந்து வேகமாக ஓட ஆரம்பித்தேன். ஆஹா... முதலாவது அதிக தூரம்... 25.04 கி.மீ... மிகுந்த பரவசத்தோடு எல்லைக்கோட்டை 2:58 மணியில் தொட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை...
அழகாக கையினால் ஓவியம் தீட்டப்பட்ட, தயாரிக்கப்பட்ட அழகான மெடல்...
அவசரமாக ஊர் திரும்பும் சூழல் இருந்ததால் படமெடுக்கும் படலம் முடித்து சிற்றுண்டி கூட எடுக்காமல் செல்பிக்களோடு விடைபெற்றேன்...
அறை திரும்பி சுடச்சுட வெந்நீரில் குளித்து புத்துணர்வோடு கிளம்பி எனது இரு சக்கர வாகனத்தில் ஒரு மணிநேரத்தில் வாழப்பாடி வந்து சேர்ந்தேன்...
இடையில் வந்த பசிக்கும், களைப்பிற்கும் மறந்து வண்டியில் வைத்த உப்பு எலுமிச்சை சாறு...
மொத்தத்தில் மிக அற்புதமான அனுபவம்.
நிறைகள் நிறைய்ய்ய்ய..:
இயற்கையான சூழலில் அழகான ஓட்டப்பாதை,
உதவி மையங்கள்,
தன்னார்வலர்கள்,
உபசரிப்பு, கனிவு,
புகைப்படங்கள் ... Etc..
குறைகள்... :
ஓட்டப்பாதையின் முதல் பாதி இறக்கமாகவும், பிற்பாதி ஒரே ஏற்றமாகவும் இருந்ததும், 5 கி.மீ-க்கு ஒன்று என்ற அளவிலான உதவிமையங்களும்,
நாய்கள் துரத்தலும்,
அதிவிரைவாய் வந்த சில வாகனங்களும் என குறைகள் குறைவாய்...
சேலம் ரன்னர்ஸ் இந்தியா குழுவின் முதல் அல்ட்ரா முயற்சி...
குழுவில் அனைவரும் ஓட்ட வீரர்கள் என்பதால் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்... இரண்டாவது முயற்சியில் இன்னும் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை... அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...
OotyUltra2018 - 30k
ஊட்டியில் மலையோட்டம்...
நேற்று காலையில் கிளம்பி சேலத்திலிருந்து ரயிலேறி கோயம்புத்தூர் செல்லும் வழியில் வேறு ஏதோ விஷயம் பேசும்போது ஊட்டி-ஓட்டத்திற்காக சென்றுகொண்டிருக்கிறேன்.. என சொன்னதும் அந்த மதியநேரத்தில் கடும் வெயிலில் திருப்பூர் ரயில்வே ஸ்டேசன் வந்த துரைஅரசு சகோவை பார்த்து ஐந்து நிமிடங்கள் அளவளாவி கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து ராஜ்குமார் காரில் நான் , ராஜ், தமிழ்செல்வன் மூவரும் ஊட்டி நோக்கி பயணம்..
ஏராளமான போக்குவரத்து நெரிசலில் சிக்கி மாலை 6:30 க்கு "பிப்" வாங்கினோம்.. எங்களுக்கு முன்னரே ஊட்டி வந்தசேர்ந்து "பிப்" வாங்கி காத்திருந்த "இரும்பு மனுஷி" ஈஸ்வரி, சகோ பூபாலனோடு இணைந்து அவரவர் அறை திரும்பினோம். கடும்வெயிலில் காய்ந்து மேலேறிய எங்களுக்கு குடல் நடுங்கும் குளிர் மிக புதிதாயும் ஆச்சர்யமாகவும் இருந்தது.. மொத்த ஊட்டிக்கும் AC போட்டு 14° ல வெச்சிருக்காய்ங்க..😉
ஓட்டம் துவங்கும் நேரம் காலை 6:15 என்பதால் அதிகாலை நிதானமாக கிளம்பி தொடக்க இடம் அடைந்தோம்...
இதுவரை மொபைல் திரையில் மட்டுமே கண்டும் அளவளாவியும் வந்த நட்புகள் பலரை குறிப்பாக Ganesh அண்ணார், மாரத்தான் சாதனை பெண் கலைமணி மேடம் மற்றும் அவர்கள் சார்ந்த கோவை ஃபோனிக்ஸ் ரன்னர்ஸ் நண்பர்கள், முகுந்தன் சார், மேலும் முகநூலில் மட்டும் நட்பில் இருந்துகொண்டு நேரில் அடையாளம் கண்டதும் புன்னகையோடு வாழ்த்தி சென்ற சிலர் என மறக்க இயலாத காலைப்பொழுதாகியது...
தொடங்கும் நேரம் மீண்டும் 15 நிமிடம் தாமதமாக 6:30 க்கு கொடி அசைத்ததும் துவங்கியது. ஓடும்பாதை பற்றி அறிந்த தகவல்களால் இந்த நேரத்தில் முடிக்கலாம் என்ற எந்த குறிக்கோளும் இல்லாமல் வழக்கம்போல ஓட ஆரம்பித்தேன். (15 கி.மீ 2.30 மணிக்குள்ளும், 30 கி.மீ 5.00 மணிக்குள்ளும் முடிக்கவேண்டும்) 15k, 30k, 60k ஓடுபவர்கள் என அனைவரையும் ஒருசேர ஓட விட்டிருந்தார்கள். ஆரம்பம் நல்ல அமர்க்களமாகத்தான் இருந்தது..
7 கி.மீ வரை சீரான ஓட்டம்... கிடைத்த வாய்ப்பில் சிறிது வேகமாய் ஓடலாம் என்ற எண்ணத்தால் நண்பர்களை பிரிந்து தனியனானேன்.. அதன்பிறகு தான் மலையோட்டம்... அட.. அட.. நடந்தும் தவழ்ந்தும் போகவேண்டி இருந்தது.. லேசாக அடிமனதில்.."ஆரம்பத்திலேயே இப்படின்னா.." என்ற கேள்வி வராமல் இல்லை.. மெல்ல மெல்ல 13 கி.மீ கடந்ததும் சிறு உற்சாகம் ... அழகான தேயிலை வாசத்தோடு அந்த தோட்டங்கள் வழியே நல்ல இறக்கமான கான்கிரீட் சாலையில், சிறு சிறு கிராமங்கள் வழியே ஓட்டம்.. சிறிது பிசகினாலும் சேதாரம் நமக்குத்தான்... சூரியன் தன் பங்குக்கு வேலையை காட்ட ஆரம்பித்தார்.. கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1500 அடிகளுக்கு மேல் இருந்ததால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் சுவாசிக்க சற்றே சிரமத்தோடு மெதுவாக ஓடி 16 கி.மீ-ஐ 2 மணிநேரத்திற்குள் முடித்திருந்தேன்... அடுத்த 23 வது கி.மீ வரை ஒன்றும் சிரமமில்லை... வெயிலின் தாக்கம் அதிகமாக உடம்பில் நீர்ச்சத்து, உப்பு இழப்பை உணர ஆரம்பித்தேன். 4 மணிநேரத்திற்குள் முடிக்கலாம் போல் தெரிகிறதே என்ற ஆசையோடு ஓடிக்கொண்டிருக்க வழியில் உதவிமையத்தில் இருந்த நண்பர் .."இதற்குமேல் தான்... உங்களுக்கு..! சரி.. வேண்டாம்.. நீங்களே பாருங்கள்" என்ற பீடிகையோடு அனுப்பிவைத்தார்... 23 ஆவது கி.மீ-ல் இருந்த உதவிமையத்தில் வேண்டுமளவு தண்ணீர், எலுமிச்சை உப்பு, வாழைப்பழம், உப்பு பிரட்டிய அவித்த உருளைக்கிழங்கு , பேரிச்சை என எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன்... "நீங்களே பாருங்கள்"என்ற வார்த்தைக்கு பதில் கிடைத்தது.. எனக்கு முன் ஓடிக்கொண்டிருந்த.... சாரி... சென்றுகொண்டிருந்த ஒருவரும் ஓடவில்லை... நடந்தும்... தவழ்ந்தும்... இந்த கடைசி 7 கி.மீட்டரில் சமதளம் என தொடர்ந்து 200 மீட்டர் கூட இல்லை.. அடிக்கடி பாதையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் போலீசார் இருந்தும் அதிவேகமாக வந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் என நம்மை ஒரு பதட்டத்தோடே ஓட (நடக்க) விட்டிருந்தார்கள்.. சரி... கடைசி ஒரு கி.மீட்டராவது வேகமெடுக்கலாம் என முயன்றால் ஒரு 500 அடி கூட முடியவில்லை... மனது ஓடு.. ஓடு என துரத்தினாலும் ... கால்கள் ஓட மறுத்தன... ஓட்டம் முடியும் இடம் இன்னும் 200 அடிதான் என்ற அறிவிப்பை பார்த்த பின் ஒருவித பரவசத்தோடு ஓட ஆரம்பித்தேன்.. கிட்டத்தட்ட 3 × 200 அடியை ஓடித்தான் ... ஓடி முடித்தான் இவன்... கொடுக்கப்பட்ட 5 மணி நேரத்தில் 4:09:15 மணியில்...
அடடே..(ஆச்சரியக்குறி..) தூரமும் கொஞ்சம் அதிகம் தான்.
முடித்த மகிழ்ச்சியை முதலில் பகிர்ந்து கொண்டது.. நீண்ட நாள் ஓட்டக்காரர் ... கோவை ஃபோனிக்ஸ் ஓட்டக்குழுவின் தூண்களில் ஒன்று, பழக நல்ல மனிதர் கணேசன் அண்ணார்தான்...நேற்றுதான் முதலில் சந்தித்தேன்... நீண்ட நாள் பழகியவர் போன்று உணர்ந்தேன். கட்டியணைத்து வாழ்த்தி... அழகான, இதுவரை நான் பார்த்திராத எனது பெயர் பொறித்த மெடல் வாங்கி அணிய வைத்து போட்டோ எடுத்துக்கொண்டு... முக்கியமாக என்னை படுக்கவைத்து ஒரு தேர்ந்த பிசியோதெரபிஸ்ட்டாக மாறி அற்புதமாக வலியை போக்கினார்... ("இவர் வாழப்பாடி போனாலும் என்னை மறக்கக்கூடாது என்றவாறே..." - நான் எப்பவும் மறக்க மாட்டேங்னா)
அப்பப்பா... என்ன ஒரு அனுபவம்? நமது வாழ்க்கை பாதையும் இதுபோலத்தானே... நல்ல சீராக செல்லும் போது எத்தனை கடினமான ஏற்றங்கள்... தொடர்ந்து வரும் இறக்கம் சுலபம் எனும்போது அங்குதான் மிக கவனமாகவும் சறுக்கிவிடாமல் பாதுகாப்பாகவும் இறங்கி.. நடுவே வரும் போக்குவரத்து போல எத்தனை இடைஞ்சல்கள், எத்தனை பிரச்சினைகள்... நடுவே வரும் உடலில் நீர்ச்சத்து குறைதல், அங்கங்கே தோன்றும் வலிகள் என பல உடல்நிலை கோளாறுகள்... இத்தனையும் தாண்டி வந்து மேடான பாதையில் மிக கடினமாக பயணித்து நாம் அடைய நினைத்த அந்த இலக்கை அடையும்போது கிடைக்கும் பெருமிதம் போல் வேறேதும் இல்லை..
ஒரு கட்டத்தில் மிகவும் அனுபவித்து ஓடிய ஓட்டம்.. இவ்வளவு கடுமையான பாதையை தேர்ந்தெடுத்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கி விட்டார்களே என ஏற்பாட்டாளர்கள் மீது சற்றே கோபம் வந்தாலும் இந்த அனுபவமும் நமக்கு ஒரு வரப்பிரசாதம்.
மலையோட்டத்தில் எனது அதிகபட்ச தூரமும் இதுதான்.. இதை கடந்ததும் மனம்(உள்ளம்) அடுத்ததை தேடுகிறது... உள்ளத்தனையது தானே உடல்.. முயற்சிப்போம்... முடிந்தவரை...
இதே பாதையில் இரண்டாவது சுற்றில் ஓடிக்கொண்டிருக்கும் நமது ராஜ்குமார் மற்றும் தமிழ் உள்ளிட்ட நண்பர்களின் நிலையை நினைத்து அப்படியே புல் தரையில் படுத்தே விட்டேன்... கொடுக்கப்பட்ட நேரத்தில் 7 நிமிடம் முன்னதாக வந்து தனது முதல் அதிகபட்ச தொலைவை கடந்த பூபாலன் ஜி, இவரை தட்டித்தட்டி, ஊக்கமும் உற்சாகமும் தந்து உடன் அழைத்துவந்து அவருக்கு பெருமை சேர்த்த "Iron Lady" ஈஸ்வரி இருவரும் உணவருந்தி மிக சிரமத்தோடு அரசு பேருந்தில் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே அறை திரும்பினர். நான் ராஜ்குமார் மற்றும் தமிழுக்காக காத்திருக்கும்போது வந்த தகவல் அதிர்ச்சிதந்தது. ஏற்கனவே காலில் உள்காயம் ஏற்பட்டு வலியில் இருந்து மீண்டுவரும் நிலையில் ஓடி தனது 37 வது கி.மீட்டரில் மிகுந்த வலி காரணமாக தமிழ்ச்செல்வன் தனது ஓட்டத்தை முடித்துக்கொண்ட தகவல்.. பெருத்த ஏமாற்றம்தான்.. ஆனால் நல்ல முடிவு... வாழ்த்துகள் தமிழ்... அடுத்த முறை கலக்குவோம்..
ஏற்பாட்டாளர்கள் மற்றும் மருத்துவ குழுவின் சிறு சிகிச்சையோடு மதியம் 2:30 மணி அளவில் தமிழ் வந்துசேர மதிய உணவருந்தி ராஜ்குமார்க்காக பதட்டத்தோடு காத்திருந்தோம்.. எண்ணங்கள் ராஜ்-ன் நிலையை நினைத்து எங்கெங்கோ போக... சரியாக 4:20 க்கு அதாவது கொடுத்த நேரத்திற்கு 10 நிமிடம் முன்பாக வந்து சேர்ந்து தன்னை நிரூபித்தார்....
இந்த மனிதனின் மன உறுதியும் உடல் உறுதியும் என்னை என்னவோ செய்கிறது... வாழ்த்துகள் ராஜ்... முதல் முறையாக கடந்த அதிக தொலைவு.. அதுவும் மலையோட்டத்தில்...
இடையில் போனசாக ஓட்டத்தில் பற்பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அசோக் டேனியல் உடன் ஒரு செஃல்பி ..யும் அறிமுகமும்... நேரமின்மை காரணமாக அதிகம் பேசவில்லை.. நிறைய பேசவேண்டும்.. காலம் கனிந்து வரட்டும்..
ராஜ் வந்ததும் உணவருந்தி நீண்ட போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே தொடக்க இடத்தில் இருந்த காரை அடைந்து ஊர் திரும்ப இரவு 8:00 மணி ஆனது..
ஓட்டத்தின் தொடக்க இடமும் முடித்த இடமும் வெவ்வேறு இடங்களில் இருந்ததும் (போக்குவரத்து, நெரிசல்), ஓட்டப்பாதை இத்தனை கடினமாக இருக்கவேண்டுமா? என்பதும் தவிர அனைத்தும் நிறைவாய் அமைந்தது.
இந்த ஓட்டம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்திருக்கிறது. நாம் எவ்வளவு தான் திட்டமிட்டாலும் ஒரு செயலை செய்யும்போது எத்தனை திறமை இருந்தாலும் சூழலும், காலமும் நமக்கானதாய் அமைந்தால் மட்டுமே எளிதில் முடிக்கலாம்... இல்லையெனில் சிறிது தாமதமாக முடிக்கலாம் என்ற பாடம் உள்பட...
வாருங்கள்.... வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் ஓட்டு(வாழ்)வோம்..
ஈரோடு ரன் - அரை மாரத்தான் ... (21k) 22.04.2018
100 நாட்கள் ஓட்ட சவால் ...
100 நாட்கள்
110:05:44 மணிகள்..
1,123.45 கி.மீட்டர்கள்...
100 பாதைகள்...
ஒரே குறிக்கோள்...
முதலில் நான் இந்தநிலை வரை வர ஊக்கமும் உற்சாகமும் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் கோடி..
ஏற்கனவே நான் எனது ஓட்ட அனுபவங்களை இங்கு நிறைய பகிர்ந்திருக்கிறேன். ஆனாலும் எல்லாவற்றிலும் முத்தாய்ப்பாக அமைந்தது இந்த 100 நாட்களின் ஓட்ட அனுபவங்கள்(பாடங்கள்) என்றால் மிகையில்லை.
ஏதோ அவ்வப்போது முடிந்த நேரங்களில் ஒரு அனுபவம் வேண்டியும், நட்பையும், நண்பர்களையும் புதுப்பித்துக்கொள்ள மாரத்தான் ஓட்டங்களில் கலந்துகொண்டிருந்த நான்... சென்ற ஆண்டு 100 நாள் ஓட்டசவாலில் கலந்துகொண்டு 16-ம்நாள் காயம் காரணமாக மிகுந்த வருத்தத்தோடும், கனத்த மனதோடும் கைவிட வேண்டியதாயிற்று.
இம்முறை தொடங்கும்போதே ஒருவித பயபக்தியோடும் பதட்டத்தோடும்தான் தொடங்கினேன். அதற்கேற்றாற்போல் முதல்நாளே மிகுந்த பரபரப்போடு துவங்கியது... ஆம்... அடுத்தநாள் (29.08.2018) ஊட்டி அல்ட்ரா மாரத்தான் இருந்ததால் முதல்நாள் அவசர அவசரமாக ஓடி 5 கி.மீட்டர் முடித்துவிட்டு கிளம்பி இரயிலை பிடித்து கோவை சென்று நண்பர்களோடு ஊட்டி பயணம்.. மறுநாள் ஊட்டியில்.. பெருந்தொலைவு ... மலையோட்டம்..
மிக கடினமான மலைப்பாதை... ஆனாலும் 31.5 கி.மீட்டர் தொலைவை வெற்றிகரமாக முடித்தேன்... பிரச்சினை அன்றல்ல.. அடுத்தநாள்தான்... இவ்வளவு தூரம் மலையில் ஓடிய கால்கள் நாளை மீண்டு(ம்) ஓடுமா? அதிகாலைக்குள் ஊருக்கு சென்றுவிட முடியுமா? என்ற கேள்வியோடே பயணத்தை தொடர்ந்தேன். கோவை வரை காரில் வந்ததால் ஒன்றும் தெரியவில்லை... கோவையிலிருந்து சேலம் அரசு (அவசர) பேருந்தில்... இவ்வளவு கொ(க)டுமையான பயணம் மிகவும் புதிது.. கடுகடுவென்ற கால்வலியுடன் வீடு வந்தபோது அதிகாலை 3 மணி... உறக்கமில்லா உறக்கம்... மூன்றாம்நாள் ஓட்டம் 5:30 மணிக்கு எழுந்து 5.6 கி.மீ ஓடி அன்றைய நாளை ஒப்பேற்றினேன்.. இதற்கிடையே இண்டியன் மாரத்தான் நடத்தும் மே மாத சேலன்ஜ் அறிவிப்பு (தினமும் குறைந்தது 5 கி.மீ.. 31 நாட்கள்) பார்த்து.. எப்படியும் ஓடப்போறோம்... இதையும் ஓடலாமே என பதிவு செய்து ஓட ஆரம்பித்தேன். 5, 6, 7 ...10 ,15, 17, 21 என ஓடி இந்த மே சேலன்ஜை 31 நாட்களில் 272 கி.மீ ஓடி நிறைவு செய்ததும் ஏதோ ஒரு ஓரத்தில் நம்பிக்கை பிறந்தது.
தினமும் குறைந்தது 2 கி.மீ என்பதை 5 கி.மீ என மாற்றியது இந்த நாட்கள்தான்.. இதையே தொடர்ந்தேன்.இதற்கு உடல் ஒத்துழைக்காத நாட்களிலும் மனத்தின் உந்துதலால் குறைந்தபட்ச கி.மீ ஓடி 3,4 நாட்களை முடித்திருக்கிறேன். ஆனாலும் ஜுன் மாதத்தில் 3 அரை மாரத்தான்களும் (50 வது நாளில் 25 கி.மீ) முடித்தது கூடுதல் பலம். இதனால் கிடைத்த நம்பிக்கை ஏன் தொடர்ந்து 10 கி.மீ x 10 நாட்கள் முயற்சி செய்யக்கூடாது? என 62-வது நாளில் தோன்ற தினமும் 10+ என தூரத்தை அதிகரித்தேன். இந்த நாட்களில் ஒரே மாதிரியான ஓட்டத்தை விடுத்து அவ்வப்போது இண்டர்வெல் ரன், டெம்ப்போ ரன், கேடன்ஸ் ரன் என ஓட்ட அனுபவசாலிகள் சொன்னபடி முயற்சி செய்தேன். இந்த பயிற்சிகள் என்னை நன்றாக பட்டை தீட்டின என்றால் மிகையில்லை. இந்த 100 நாட்களில் எப்படியாவது ஒருநாள் ஒரு முழு மாரத்தான் ஓடி முடிக்கவேண்டும் என்ற எனது தாகம் இன்னும் அடங்கவில்லை. இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஓடலாம் என முயற்சி செய்தும் நண்பர்களின் வேலை பளுவால் இயலாது போனது. இந்த வேகம்தான் என்னை 72-வது நாள் தனியாக சுய உதவியோடு 32.5 கி.மீ வரை இட்டுச்சென்றது. அதுவும் தேசிய நெடுஞ்சாலையில்... இன்னும் 10 கி.மீ ஓடியிருந்தால் தாகம் தீர்ந்திருக்கும்.. ஆனால் இயற்கை என்னை அதிக வெப்பத்தை காட்டி தடுத்தது. அவ்வப்போது ஏதாவது தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்து எனக்கு சாதகமாக்கி 10 x 10 நாள்முடித்துவிட்டு தொடர்ந்து 10 x 20 நாளாக மாற்றிக்கொண்டேன்.. 78-ம்நாள் அதிகாலை இருட்டில் 10கி.மீ ஓடி முடித்து அவசர அவசரமாக கடைசி நிமிடத்தில் கிளம்பிய இரயிலேறி சென்னை சென்றது மறக்கமுடியாத ஒன்று. தொடர்ந்த இந்த பயிற்சியால் 79-ம்நாள் சென்னை ரன்னர்ஸ் அருமையான முறையில் நடத்திய 20 மைல்(32.2 கி.மீ) ஓட்டத்தை மிக மனநிறைவோடும், மகிழ்வோடும் 3 மணி நேரத்திற்குள் முடிக்கமுடிந்தது.
மீண்டும் மறுநாள் ஓட்டம் பற்றிய கவலை.. அதனால் இரவு இரயிலுக்கு பதிவு செய்திருந்தும் அதை கேன்சல் செய்து முன்னமே பகலில் போகலாம் என தவறுதலாக டிக்கெட் போட்டு உறுதி ஆகாமல் அபராதம் கட்டி ஊர் வந்து சேர்ந்தேன்.
80-வது நாள் ஓட்டம் அழுகையோடு துக்கம் சுமந்து ஓடப்போகிறேன் என்பது அதிகாலை 2.30 மணிவரை தெரியாது. எனது அத்தை.. அப்பாவின் சித்தி மகள்.. 70 வயது.. திருமணமாகாதவர்.. எங்கள் மீது மிகவும் பாசமாக இருந்தவர். சிறுவயதில் பள்ளி கோடை விடுமுறைக்கு வருடம் தவறாமல் வாசம் செய்யும் வீடு. பாசத்தால் திணறடிப்பார்கள்.. மார்பக புற்றுநோய் தாக்கியது தெரிந்தும் யாருக்கும் சிரமம் வேண்டாம் என யாரிடமும் சொல்லாமல் மறைத்து கடைசியில் விஷயம் தெரிந்து 1 மாதம் படுக்கையில் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். தகவலறிந்து உடனே போக இயலாது மகன்களை பள்ளிக்கு (பரிட்சை என்பதால்) அனுப்பும் வரை இருப்புகொள்ளாமல் கவனத்தை ஓடுவதில் செலுத்த ஓடினேன். என்னையும் அறியாமல் கண்ணீரோடு...
பின்பு ஊர்சென்று இறுதிசடங்குவரை இருந்து முடித்துவிட்டு திரும்பினோம்.
சனி (அ) ஞாயிறுகளில் தூரத்தை அதிகமாக்கி ஓடியதில் எனது குறிக்கோள் தூரமான 750 கி.மீ கடந்தேன். விடாமல் தினமும் 10 கி.மீ க்கும் மேல் ஓடியதால் 1000கி.மீட்டரை தொடும் வாய்ப்பும் தெரிந்தது. முயற்சிக்கலாம்.. முடிந்தால் முடிக்கலாம் என தொடர்ந்ததில் 92 ம் நாள் 1010 கி.மீ கடந்ததும் அளவில்லா மகிழ்ச்சி.. அடுத்தது என்ன? என்ற எண்ணத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்போது வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்யலாம் என 1,111 கி.மீ ஓட முடிவு செய்தேன்..
இதற்கு தடை 96-ம்நாள் வந்தது வலது "கண்"வ(லி)ழியே... காலை எழுந்ததும் செக்கச்சிவந்து மிகுந்த வலி... சொட்டுமருந்து விட்டால் சரியாகும் என்று சொட்டுமருந்து விட்டு ஓடச்சென்றேன்.. அதே கண்ணோடு அலுவலகமும்... கணினியில் வேலை என்பதால் இன்னும் வலி அதிகமாக மறுநாள் மருத்துவரை பார்க்கலாம் என்றெண்ணி இருந்தேன். அடுத்தநாள் இன்னும் கூடுதல் வலி.. ஓட வேண்டுமே...? தினமும் 10கி.மீ என 35 நாட்களை கடந்திருந்தேன்.. இது தொடருமா? 1,111 என்பது நடக்குமா? என்ற கேள்வியோடு ஓடித்தான் பார்ப்போமே என 10 கி.மீ ஓடி முடிக்க.. வலி இன்னும் அதிகமாக அரக்கப்பரக்க கிளம்பி வழக்கமாக பார்க்கும் கண் மருத்துவர் ஊரில் இல்லையென்பதால் "நாங்க இருக்கோம்" வாங்க.. என கூப்பிட்ட வாசனிடம் தஞ்சம் புகுந்து முதலில் வலியை குறையுங்கள்.. பிறகு மற்றதை பார்க்கலாம் எனக்கூறி வலியை குறைத்தேன். சிலபல பரிசோதனைகளுக்குப்பின் கண்ணின் கருவிழியில் காயம் உள்ளது என்றதும் .... அடடா... யார் கண் பட்டதோ..? கண்ணிலேயே பட்டுவிட்டதே என்று புலம்பி நாளைய ஓட்டம் என்னவாகுமோ என எண்ணி வந்தேன். கொடுத்த மருந்துகளாலும் ஓய்வாலும் மிதமான வலி இருந்தாலும் ஓரளவு குறைந்தது.
இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது? எத்தனை தூரம் ஓடியிருக்கிறீர்கள்? என்ற மனைவி மற்றும் மகன்களின் கேள்விகளும் அதற்கான அவர்களின் பதில்களும் மிகுந்த உற்சாகம் தந்தன.
97 நாளில் 1,075 கி.மீ கடந்ததும் 1,111 சாத்தியம் என்று உணர்ந்ததும் அடுத்த கட்டமாக 1,123.45 கி.மீ ஓட முயற்சி செய்ய எண்ணம் வர ... கடைசிநாள் எப்படியாவது 21.2 கி.மீ ஓடி வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்ற முடிவில் திடமாக இருந்ததால் இருக்கும் இந்த மூன்று நாட்களில் கடைசிநாளுக்காக 21.2 கி.மீ ஐ விடுத்து மீதமுள்ள 98வது, 99வது நாட்களுக்கு முறையே 12.4 + 14.5 கி.மீ என பிரித்து ஓடினேன்.
100 ம்நாள்...
இரவில் குறைந்தபட்சம் ஒரு 20 முறையாவது விழித்திருப்பேன். ஒரு வித பயமும் கூட... கண்ணின் காயம் ஏதாவது படுத்திவிட்டால்?
ஒரு அசட்டுத்துணிச்சலோடுதான் கிளம்பினேன்.. முதல் 2 கி.மீ முடித்ததும்.. 100 நாட்கள் சவால் முடிந்ததே என்ற மகிழ்ச்சியோடு முதல் லட்டு...
10 வது கி.மீ தொட்டதும் ... வாவ்... தொடர்ந்து 39 வது நாளாக 10 கி.மீ + அதற்கும் மேல்...என்பதால் இரண்டாவது லட்டு.. 21.2 வது கி.மீ தொட்டதும் ஒரு கணம் சிலிர்த்த என் உடம்பை நினைத்தால் இப்போதும் சிலிர்க்கிறது.. மூன்றாவது லட்டு.. அதுவும் இந்த சூழலில் கடைசி நாளன்று நினைத்த 1,123.45 கி.மீட்டரை 21.2 அரை மாரத்தானோடு குறிப்பாக Sub 2 ல் (1:55 மணிக்குள்) முடித்த அந்த தருணம்... அந்த உணர்வுகள்.. மகிழ்ச்சி.. சத்தியமாக கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது... நான்காவது லட்டு.. திரண்ட ஆனந்த கண்ணீரை அடக்க முடியாமல் கிடைக்கப்பெற்ற மெடலை எனக்கு நானே போட்டு செல்பி எடுத்து குழுவில் போட்டு தனிஒருவனாக இங்கே மகிழ்ச்சியை பகிர யாரும் இல்லையென்றாலும் ஆங்காங்கே குழுவில் இதர வெற்றியாளர்களின் பதிவை பார்த்து நானும் அவர்களோடு இருப்பதாய் உணர்ந்து நான்கு லட்டுகளோடு (நினைவில் மட்டும்) மகிழ்வை கொண்டாடினேன்.
கடந்தபோன எனது 17 மாத ஓட்ட வாழ்வில் எனக்கு நானே போட்டியாளனாய் இருந்து செய்த அத்தனை சாதனைகளையும் இந்த 100 நாட்கள் சாதாரணமாக்கியிருக்கிறது.
400 மீட்டர் : 1:28 நிமிடம்
1 கி.மீ : 4:12 நிமிடம்
5 கி.மீ. : 22:15 நிமிடம்
10 கி.மீ : 50:19 நிமிடம்
20 கி.மீ : 1:46:31 மணி
21.1 கி.மீ : 1:52:51 மணி
30 கி.மீ 2:47:47 மணி
32.2 கி.மீ 2:58:27 மணி
41.195 கி.மீ 04:13:15 மணி
என எனது தனிப்பட்ட சிறந்த நேரங்களில் முடிக்க மிகப்பெரிய உதவியாக இருந்தது என்றால் மிகையில்லை. அடுத்த எனது இலக்கை நோக்கிய பயணத்தை இலகுவாக்கியிருக்கிறது. எனது தன்னம்பிக்கையின் அளவை தாறுமாறாக உயர்த்தியிருக்கிறது.
இந்த 100 நாட்களில் நான் எனது வேகத்தையும், மூச்சையும், இதயத்துடிப்பையும் கட்டுப்படுத்த பழகியிருக்கிறேன். மனத்தின் போக்கில்செல்லாமல் உடல் சொல்வதை மனம் ஏற்க செய்யும் அளவிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறேன். எந்த வகைகளில் காயமில்லாமல் ஓடலாம் என்பதையும், தேவையான நேரங்களில் தேவையான ஹைடிரேஷன் எடுக்கவேண்டும் என்ற பாடங்களையும் உணர்ந்திருக்கிறேன். மொத்தத்தில் உடலும் உள்ளமும் தங்களை உணரச்செய்திருக்கிறேன்.
மேலும் இந்த நாட்களில் மழையில் ஒருநாள் ஆனந்தமாக நனைந்து ஓடியது, இரண்டு முறை நாய்கடியிலிருந்து தப்பியது, இரவு நேரத்தில் அடித்த அழைப்பு மணிக்காய் அவசரமாய் ஓடி வந்து கட்டில் விளிம்பில் கெண்டைக்கால் அடிபட்டு காயமாக மறுநாள் ஓட வேண்டுமே என விடிய விடிய தடவி பார்த்தது, என்னையும் மதித்து இதர ஓட்டக்குழுக்களில் இருந்து ஆலோசனைகள் கேட்டது, நமது குழு உறுப்பினர்களுக்கும் சிற்சில தெரிந்த ஆலோசனைகள் தந்தது, STRAVA பற்றி ஆராய்ந்ததும், அதில் பலரின் தவறுகளை சுட்டி காட்டியது (Strava ஒருநாளும் தவறுசெய்யவில்லை) என சுவாரஸ்யங்கள் நிறைய...
எனது ஓட்டத்தை கண்காணித்து அவ்வப்போது அறிவுரைகள் தந்து என்னை இன்னும் சிறப்பாக்கிக்கொள்ள உதவிக்கொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த 100 நாட்களில் என் ஆர்வம் உணர்ந்து என்னை தளர விடாமல் நான் கொடுத்த சிறு சங்கடங்களையும் ஏற்று வருந்தாமல் என்னை ஓட அனுமதித்த என் மனைவிக்கும் மகன்களுக்கும் உள்ளப்பூர்வ நன்றிகள்..
இத்தனை தூரம் என்னை சுமந்து எந்த பிரச்சினையும் தராமல் ஓடிய எனது Sketches Shoe க்கும் நன்றி..
முத்தான முதல் முழு மாரத்தான்...
Airtel Hyderabad Marathon 2018 (26.08.2018)
முழு மாரத்தான் ஓட வேண்டுமே? எங்கு ஓடலாம்? என்றதும் "ஹைதராபாத்" என்றார் ராஜ்... அதிக மேம்பாலங்கள், ஏற்றமான சாலைகள் இருக்குமே என சற்று பயந்து 'முதல் முழு மாரத்தான் ஓட ஐடியா கேட்டால் இப்படியா சிக்க வைப்பது? ' என்றதற்கு ராஜ் மற்றும் தமிழ் இருவரும் தைரியம் தந்தனர். 'அரை மாரத்தான் ஓட இருந்த அருணனையும் முழு மாரத்தான் ஓட தயார் செய்திருக்கிறோம். பயமின்றி பதிவு செய்யுங்கள் என்றனர்'. சரி... எப்படியோ.. உடன் ஓட ஆள் இருக்கும்போது எது நடந்தாலும் பார்க்கலாம் என ஹைதராபாத் மாரத்தானில் பதிவு செய்தது முதல் அதை நினைக்கும்போதெல்லாம் வரும் பதட்டத்தை தவிர்க்க இயலவில்லை.
100 நாள் ஓட்ட சவால் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பயிற்சி ஓட்டமாக சென்னை, போரூர் ரோலிங் ரன் எனப்படும் மேம்பால ஓட்டத்தில் 32.1 கி.மீ (20 மைல்) தூரத்தை 3 மணி நேரத்திற்குள் முடித்ததும்... 100 நாள் சவாலை 1,123.45 கி.மீ ஓடி நிறைவு செய்ததும் எனக்குள் பெரும் நம்பிக்கையை விதைத்தது.
ஒரு 42 கி.மீ ஓட்டத்திற்கு கிட்டத்தட்ட 2000 கி.மீ பயணம் செய்கிறோமா? என்ற மலைப்போடுதான் பயணம் ஆரம்பமானது... இந்த அனுபவங்களை பெற இன்னும் 1000 கி.மீ கூட பயணிக்கலாம் என கடைசியில்தான் தெரிந்தது. வழக்கம்போல் கடைசி நேர பரபரப்போடு ஓடித்தான் ரயிலேற முடிந்தது. கோவையிலிருந்து தமிழும் அருணனும்... சேலத்திலிருந்து நான் என தொடர்ந்த பயணம்.. ஓட்டம் பற்றி அவரவர் அனுபவ அளவளாவல்கள், உணவு, உறக்கம், விழிப்பு என ரயிலின் ஓட்டத்தோடு பொழுதும் ஓட மறுநாள் மதியம் 2 மணிக்கு ஹைதராபாத்தில் கால் பதித்தோம். இடையில் அலுவலக பணி நிமித்தமாய் ராஜ் விமானம் மூலம் எங்களுக்கு முன்னதாக இங்கே வந்து பிப் அடங்கிய கிட் வாங்கி காத்திருக்க...தெலுங்கு மொழி தெரியாமல் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து சமாளித்து ஒரு வழியாய் இடம் சேர்ந்தோம். ஹைதராபாத் வந்திருக்கும் இதுவரை சந்தித்திராத என் போன்ற நட்புகளை நேரில் சந்திப்பதற்காகவே வந்திருந்த ஹைதராபாத்தில் பணிபுரியும் திரு.செந்தில்துரை அவர்களின் (உள்ளத்தனைய உடல் குழுவிலிருந்து 100 நாள் ஓட்டத்தை நிறைவு செய்தவர்) வரவேற்போடும் வழிகாட்டுதலோடும் சென்று பிப் வாங்கி திரும்பும்போது மாலை மணி 5. கடும்பசி.. "பாரடைஸ்".. உலகப்புகழ் பிரியாணி ஹோட்டல் என்ற அடைமொழியோடு இருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றார் நண்பர் செந்தில். அந்த மாலை நேரத்திலும் அவ்வளவு கூட்டம். அரை மணிக்கு மேல் காத்திருந்துதான் சாப்பிட முடிந்தது... அடடா... உண்மையான பிரியாணி சுவையை இங்குதான் சுவைத்தேன். நம்மூரில் பிரியாணி என்ற பெயரில் வண்ணக்கலவை சாதத்தில் இரண்டு கறித்துண்டுகளை போட்டு பிரியாணியின் பெயரை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாத பிரியாணி.. நட்புகளோடு தங்கும் இடம் அடைந்தபோது அங்கு தனியாக ஓட்டத்திற்காகவே வந்திருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் நாகர்கோவில் நண்பர் சிபின் அறிமுகமாக.. எல்லோரும் ஒன்றாய் அளவளாவி இரவு உணவாய் தயிர்சாதம் (அப்படியே நம்ம ஊர் சுவை) வரவழைத்து உண்டு நேரமே உறங்கி அதிகாலை 2:45 க்கு விழித்து தயாராகி நிதானமாக ஐவரும் ஓட்டம் தொடங்கும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்த ஓட்ட வீரர்களைக்கண்டு அதுவரை அமைதியாக இருந்த மனம் பதட்டமானது. 42 கி.மீ தூரத்தை இத்தனை மணிக்குள் முடிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் முழுமையாய் எந்த காயமும், சிரமமுமின்றி முடிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. நண்பர்களின் கேள்விக்கும் அதுவே பதிலாய். போட்டி தொடங்கும்போது அன்றைய சூழல், காலநிலை, உடல்நிலை நமக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே சிறந்த ஓட்டத்தை வெளிப்படுத்த இயலும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனாலும் மனதிற்குள் 4.15 முதல் 4.30 என்று கணித்திருந்தேன்.
சரியாக 5 மணிக்கு துவங்கிய ஓட்டம்... முதல் 10 கி.மீ ஒரு ஏரியை சுற்றிய அழகான சமதள பாதை... 54 நிமிடத்தில் கடந்திருந்தேன். நாம் குறித்த நேரத்திற்கு தகுந்தாற்போல் நம்மை உடன் அழைத்துச்செல்லும் ஓட்ட வீரர்கள் எவரோடும் செல்லாமல் 4.00 மணி பேசருக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தேன். 21 கி.மீ ஐ 1:55 மணியில்.. இந்த தூரம் கடக்கும்வரை இரண்டு உதவி மையங்களில் வெறும் நீரும் ஒரு துண்டு வாழைப்பழமும்...
சாலை ஓரங்களிலும், உதவி மையங்களிலும் தன்னார்வலர்களின் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
பள்ளி மாணவர்கள், தனியார் அமைப்பை சார்ந்தவர்கள் என அனைவரும் ஒலி பெருக்கி, மேடை, வாத்தியங்கள், நடனம் என அமர்க்களம் செய்தனர். இத்தனை கூட்டத்தை எங்கும் பார்த்ததில்லை.
சராசரியாக 5:30 நி /கி.மீ என்ற வேகத்திலேயே சென்றதால் 32 கி.மீ தூரத்தை 3 மணி நேரத்திற்குள் கடந்ததும் ... ஒரு பேராசை வந்தது... ஏற்கனவே தமிழ் சொன்னதுபோல... அதாவது 32 கி.மீ தூரத்தை 3 மணி நேரத்திற்குள் கடந்தால் மீதமுள்ள 10 கி.மீட்டரை 1 மணி நேரத்தில் சுலபமாக முடிக்கலாம்.. அதனால் 4 மணி நேரத்தில் முழுமாரத்தானை முடிக்கலாமே என்பதுதான் அது...
32 கி.மீ தூரத்திற்கு பிறகுதான் உண்மையான சவால் காத்திருக்கிறது என்பதை மறந்துபோனேன். ஊருக்கு தரும் உபதேசம் நமக்கு இல்லாமல் போனதாலும், வெறும் 4 மணி நேரத்தை மட்டுமே குறிவைத்து ஓடியதாலும் ஓடும் உடம்பின் உந்து சக்திக்கு தேவையான பொருட்களை எடுக்க மறந்தேன். மறந்தேன் என்பதைவிட தவிர்த்தேன்... அதன் பலனை 37, 38, 39 வது கி.மீட்டர்களில் நன்கு அனுபவித்தேன். வெய்யில் தலை காட்ட உடல் சோர்ந்து, பசி அதிகமாகி வெலவெலத்து போனது. 32 கி.மீட்டருக்கு பிறகு முழு மாரத்தான் பாதையை மாற்றிய பின் உதவி மையங்களின் எண்ணிக்கை குறைவு என்பதும் மிகப்பெரிய குறை.. இந்த நேரத்தில் நான் உடன் வைத்திருந்த உப்பு எலுமிச்சை ஜூஸ் பேருதவி செய்தது. ஷார்ட்ஸ் பையில் வைத்திருந்த Fast & Up Gel ல்லை எடுக்க தோன்றவில்லை.. எல்லோருக்கும் நான் சொல்வேன்.. "தேவையோ..? இல்லையோ..? 2 அல்லது 3 கி.மீட்டருக்கு ஒருமுறை தவறாமல் உடலின் சக்திக்கு ஏதாவது எடுத்துக்கொள்ளுங்கள்.." என்று...
38 வது கி.மீட்டரில் 'முதுகு தட்டி.. ம்ம்ம்ம்.. ஓடுங்க.. ஓடுங்க..' என்றபடி என்னைக்கடந்து ஓடிய தமிழையும், 41 வது கி.மீட்டரில் எப்படி கடந்துபோனார் என்பதே தெரியாமல் ஓடிய ராஜ்ஜையும் ஸ்டேடியத்தில் சென்றுதான் பார்த்தேன். கடைசி 500 மீட்டரில் "சூப்பர்... சூப்பர்...சார்... யூ ஆர் டன் இட்... சார்.." என்ற குரல் கேட்டு மிச்சமிருந்த சக்தி அனைத்தையும் திரட்டி வேகமாக ஓடி எல்லைக்கோட்டை தொட்டு பார்க்கும்போது... அந்த கடிகாரம் 04:13:15 - ஐ காட்டி வரவேற்றது...முதலாவது முழு மாரத்தான் 42.195 கி.மீ முடித்ததற்கான பதக்கம் கழுத்தில் அணிவித்தபோது அளவுகடந்த மகிழ்ச்சி.. மயிர்க்கூச்செறிய பெற்றுக்கொண்டேன்.
இத்தனை நாளும் நான் ஒரு தொலைதூர ஓட்டக்காரன் என்று சொல்வதில் ஒரு இனம்புரியா தயக்கம் இருந்துகொண்டே இருந்தது... இந்த ஏர்டெல் ஹைதராபாத் மாரத்தான் ஓடி முடிக்கும்வரையிலும்... ஏதோ நாமும் 1% சாதித்த மனநிறைவு..
விரைவில் ஒருநாள் மீண்டும் முழு மாரத்தான் ஓடி முடிக்கும்போது எல்லைக்கோட்டின் அருகே உள்ள கடிகாரம் 03:58:59 என்று காட்டி வரவேற்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது. இந்த ஓட்டத்தில் நான் செய்த தவறுகளை அசை போட்டு வருகிறேன். இங்கு நான் பெற்ற அனுபவங்களில் இருந்து வேண்டியதை எடுத்துக்கொண்டு முழு மாரத்தான் "ஓடி முடித்த" 857 பேரில் 120 ஆவது ஆளாக வந்த நான் விரைவில் இரண்டு இலக்கத்தை அடைய முயற்சிப்பேன்... 100 நாள் ஓட்ட சவால் இல்லையென்றால் நான் இந்த தூரத்தையும், நேரத்தையும் கண்டிப்பாக நெருங்கியிருக்கமுடியாது.
இதோ தற்போது ... வரிசையில்...
18 நவம்பர் 2018 , GG கோவை புதூர் 21 k..
06 ஜனவரி 2019 ... சென்னை மாரத்தான்.. 21 k
20 ஜனவரி 2019 ... டாட்டா மும்பை மாரத்தான் (42.195 k)...
இதோ இந்த ஆண்டில் இதுவரை (11 மாதங்களில்) 179 ஓட்டங்களில் 1,984 கி.மீட்டர்கள் ஓடியிருக்கிறேன்.. (as per STRAVA Record)
சமீபத்தில் மிதிவண்டியையும் மிதிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
நான் ஓட்டம் துவங்கிய நாள் முதல் மொத்தத்தில் 291 ஓட்டங்களில் 2,916 கி.மீட்டர்கள் ஓடியிருக்கிறேன்... (as per STRAVA Record)
இன்னும் காத்திருக்கும் தூரங்களை காலம் அனுமதித்தால் கட்டாயம் கடப்பேன்...
இதோ என்னை தொடர...
https://www.strava.com/athletes/21249980
மீண்டும் சந்திப்போம்....






























































