அனைவருக்கும் வணக்கம்...
நான் பாலமுரளி.. வயது 50.. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாய் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் எனது சொந்த ஊர் (இருப்பிடம்). கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் & அச்சுத்தொழில் ... சேலம் அருகே வாழப்பாடியில்...
மனைவி மகேஸ்வரி... அரசு ஊழியர் - நீதித்துறை ... இரண்டு மகன்கள் ... தரணிஷ் (18 yrs).. பரத்கண்ணன் (14 yrs)..
எனது இந்த பதிவுக்கான முதல் காரணம்...
நான் பாலமுரளி.. வயது 50.. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாய் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் எனது சொந்த ஊர் (இருப்பிடம்). கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் & அச்சுத்தொழில் ... சேலம் அருகே வாழப்பாடியில்...
மனைவி மகேஸ்வரி... அரசு ஊழியர் - நீதித்துறை ... இரண்டு மகன்கள் ... தரணிஷ் (18 yrs).. பரத்கண்ணன் (14 yrs)..
எனது இந்த பதிவுக்கான முதல் காரணம்...
"உள்ளத்தனைய உடல்" என்ற உடற்பயிற்சி சார்ந்த முகநூல் குழுமத்தில் நான் என்னை இணைத்துக்கொண்டு ஐந்து ஆண்டுகள் (12 அக்டோபர் 2016) முடிந்து ஆறாவது ஆண்டு துவக்கம் மற்றும் மாரத்தான் உலகம் என்னையும் தத்தெடுத்து நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாம் ஆண்டில்... (09 ஏப்ரல் 2017 ல் "Tower Twisters Anniversary Run" முதல்...)
இரண்டாவது காரணம்...
களத்தில் இறங்கலாமா? வேண்டாமா? ஓடலாமா? நம்மால் முடியுமா? இதெல்லாம் நமக்கு தேவையா? சரிப்பட்டு வருமா? இதனால் என்ன பலன்? என்ற பல்வேறு கண்ணோட்டம் கொண்டு எதையுமே கண்டுகொள்ளாமல் இருப்பவர்களில் ஓரிருவரையாவது இந்த பதிவு தெளிவாக்காதா? என்ற எண்ணமும்தான்..
பள்ளி நாட்களில் நான் படித்த பெரியகிருஷ்ணாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியிலும் சரி... ஏத்தாப்பூர், அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சரி... அதீத ஆர்வம் இருந்தும் விளையாட்டு போன்ற எந்த ஒன்றையும் நினைத்தது கூட கிடையாது... படிப்பு... படிப்பு... பெயருக்கு கபாடி, கோகோ மற்றும் பேட்மிண்டன் விளையாட்டுகள் தோழர்களோடு தோழமைக்காக ஆடியதாக ஞாபகம்..
ஆத்தூர், வடசென்னிமலை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கால்வைத்தபோது "தேசிய மாணவர் படை" (NCC) யில் இணைந்து என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டதன் பலன் .. எனது கல்லூரியின் தேசிய மாணவர் படைக்கு (ஏறக்குறைய 200 மாணவர்கள்) தலைவன்...(CSUO).. 1994 ல்.. இந்திய தலைநகர் டெல்லி தொட்ட முகாம்கள்.... (துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 40% இராணுவ பயிற்சி)
அதோடு சரி... தொழில், திருமணம், சம்பாத்தியம்.. என்ற வழக்கமான திசையில் பயணம்...
மூளைக்கட்டி:
காலம் போடும் கோலத்தின்முன் நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஜுன் 2005 ...(எனது 30-ஆவது வயதில்) அப்போது மணமாகி ஓராண்டு கூட தாண்டவில்லை.. விதி தாண்டவமாடியது.. மனைவி 5 மாத கர்ப்பத்தில்... அவ்வப்போது வரும் தலைவலிக்கு உள்ளூர் மருத்துவ நண்பர்களின் மருத்துவம்... வலது காதின் கேட்கும் திறன் குறைந்துகொண்டே வந்தும் அதற்கான காரணத்தை கண்டறியக்கூட முடியவில்லை. சைனஸ், கண் பார்வை கோளாறு என இருந்துவிட்டேன். வேகமாக நடந்து சென்றாலும் தலைக்குள் ஏதோ உருளும் உணர்வோடு தவித்த நாட்கள் நிறைய. ஆனாலும் ஏதோவொரு பிரச்சினை உள்ளது என்பதை உள்ளூர உணராமல் இல்லை.
ஒருநாள் திடீரென தாங்கமுடியாத அளவிற்கு தீவிர தலைவலி.. பார்வை இரண்டு இரண்டாய் தெரிய.. நிற்க முடியாத வேதனை...வலது கையும், வலது காலும் என் பேச்சை கேட்க மறுத்தன.. வலிக்கு ஊசி, மாத்திரை என முதலுதவி எடுத்துக்கொண்டும் மணிக்கணக்கில் ஆனது பழைய நிலைக்கு திரும்ப. நண்பனின் ஆலோசனையின்பேரில் இணையத்தில் விலாசம் பிடித்து மறுநாள் கோவையில் Dr.பிரானேஷ்... என்ற பிரபல மருத்துவரைக்காண அவசரமாக சென்றேன். .. முன்பதிவு இல்லாததால் மறுநாள்தான் காணமுடியும் என்றதும் தங்கை வீட்டில் இரவைக்கழித்து மறுநாள் (நண்பனின்) தங்கையின் கணவரும் நானும் சென்றோம்.
எனது பிரச்சினைகள், அறிகுறிகள் பார்த்து ஒரு MRI ஸ்கேன் பார்க்கலாம் என்றார்.. ஸ்கேன் செய்து ரிப்போர்ட் வாங்கி திரும்ப செல்லும்போது இரவு 11:30 மணி ... ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு அடுத்த நாள் மீண்டும் வரச்சொல்லி உள்ளே சென்றவர்... போனவேகத்தில் மீண்டும் வந்து மறுநாள் தந்த அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்து உடனே உள்ளே அழைத்தார்... ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்ததும். என்னை வெளியே அமரச்செய்து உள்ளே சென்ற மச்சானிடம் ஏதோ தனியாக பேசினார்.
கலங்கியபடி வெளியே வந்தவரிடம் .."என்ன பிரச்சினை? என கேட்க... அவர் என் கேள்வியை தவிர்த்து.. "ஒரு ஊசி போட்டுக்க சொல்றார்.. போட்டுக்கோங்க.. நான் கார்ல போகும்போது மீதிய சொல்றேன்".. என்றதால் வலி போக்கும் ஊசி போட்டுக்கொண்டு கிளம்பினோம்... அடுத்து மனதில் பெரும் வலி ஏற்படும் ஆபத்தை அறியாமல்.. நானும் பதட்டத்தோடும், இனம்புரியாத பயத்தோடும்... காரில் போகும்போது அந்த ஸ்கேன் படத்தை பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது... அவரும் என்னை திகிலோடு பார்த்தார். படத்தில் ஒரு சிறிய ஆப்பிள் பழத்தை ஒத்த அளவில் வெற்றிடம். இது என்ன? இந்த இடத்துல எதும் பிரிண்ட் ஆகல.. வெள்ளையா இருக்கு..? என அவரைக்கேட்க.. இதுதான் உங்கள் பிரச்சினை என்றார்...
Acoustic Neuro Fibroma என்ற கட்டி மூளையின் மேல்.... மண்டை ஓட்டின் உள்ளே.. வலது காதின் செவிநரம்பில் சிறிய அளவில் வளர்ந்து இவ்வளவு பெரிதாக... இதன் அளவு பெரிதாகி மூளையை அழுத்துவதால் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிப்பு, இந்த தலைவலி மற்றும் கைகால், இதர பிரச்சினைகள். இது எந்த வகையிலான கட்டி என்பது தெரியவில்லை என்றும் அதிக அழுத்தம் தந்தால் உடையக்கூடும் அதாவது மலம் கழிக்கும்போது தரும் அழுத்தம் கூட தாங்காது. கட்டி உடைந்தால் 'கதை முடிந்தது' என்ற அதிர்ச்சி தகவலோடு உடனடியாக இரவோடு இரவாக வேலூர் பிரபல மருத்துவமனை சென்று அறுவை சிகிச்சைக்கு தயாராக சொன்னாராம்.
சகலமும் ஒடுங்கிப்போயிருந்தேன். ஆண்கள் யாராவது அழுதால் பிடிக்காமல் திட்டும் நான் முதன்முறை அழுதேன். எனக்காக அல்ல. என் மனைவிக்காக.. இந்த இளம் வயதில் வயிற்றில் பிள்ளையோடு தவிக்கவிட்டுவிடுவோமோ? என்ற பயத்தில். நான் போனால் தாய், தந்தைக்கு என் தம்பி இருக்கிறான். என் மனைவிக்கு??
நான் வீடு வரும்முன் அழுது தீர்த்த பெற்றோரையும், தம்பியையும், மனைவியையும் சமாதானம் செய்த நண்பர்கள் தந்தை, தம்பியோடு அடுத்த நடவடிக்கைக்கு ஆயுத்தமாயினர். உள்ளூர் மருத்துவ நண்பர்கள் ஆலோசனையின் பேரில் பெங்களூர் மணிப்பால் மருத்துவமனை செல்ல முடிவு செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை நடக்கும்போது எதுவும் நடக்கலாம்.. எனவே மூளை நரம்பியல் துறையில் மிக திறமையான, பெங்களூரில் பிரபல மருத்துவர் Dr.A.S.ஹெக்டே அவர்களிடம் சரணடைய எண்ணினோம். இவரின் கை பட்டால் சேதாரம் மிகக்குறைவு என்பதும் ஒரு காரணம். முன்பதிவு இல்லையென்றால் இவரை சந்திப்பது மிக கடினம், மாதம் கூட ஆகும் என்றார்கள்.
இந்த கடினமான சூழலில் அன்றைக்கு தொடர்பில் இருந்த நண்பனின் தந்தையின் நண்பர் பெங்களூர் NAL ல் பணியிலிருந்த திரு.சத்தியநாராயணன் மாமா அவர்கள் பெரும் சிரத்தையெடுத்து அவரின் துறை சார்ந்த நண்பர்கள் உதவியுடன் அடுத்த 2 மணிநேரத்தில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற்றார். மருத்துவரின் பேச்சு, அவர் தந்த தைரியம், எதிர்வரும் பிரச்சினைகள் கேட்டதும்தான் நான் நானானேன். வீட்டிற்கு சென்று எல்லோருக்கும் தைரியம் சொல்லி 2 நாள் கழித்து மணிப்பால் மருத்துவமனையில் அட்மிட் ஆக சொல்லியிருந்தார்.
சொன்னதுபோன்றே அட்மிட் ஆனேன். அறுவைசிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள் தொடங்கியது. 3 நாட்கள் தொடர்பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்குப்பின் தேதி நிர்ணயித்தார்கள்... ஒரு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு துவங்கிய அறுவைசிகிச்சை (14 பேர் கொண்ட மருத்துவ குழு - கிட்டத்தட்ட எட்டரை மணி நேரம் ) மாலை 7:30 மணிக்கு நிறைவடைந்தது. மரணத்தின் வாயில்வரை சென்று திருப்பி அனுப்பப்பட்டேன். மயக்கம் தெளிந்து நம்பமுடியாமல் பார்த்தேன்.
வலது காதின் செவிநரம்பில் கட்டி இருந்ததால் அதை வெட்டி எடுக்கும்போது செவி நரம்புகளும் கட்.. வலது காது.. கேட்'காது'... தண்டுவடத்திலிருந்து வலது முகத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளும் வெட்டுப்பட்டதால் வலது பாதிமுகம் உணர்விருந்தும் செயலற்று போனது. வலது கண் இமைக்காது. 24 மணி நேரமும் திறந்தவாறே இருக்கும்.. அவ்வப்போது உலரும் கண்ணிற்கு இன்றுவரை உயவு சொட்டுமருந்தே துணை... வலது புருவம், வாய் அசைவற்று இருக்கும். நெடுநாள் உடன் பழகியவர்கள் கூட உடனே கண்டுபிடிக்க இயலாத இன்னொரு முகத்தை வாங்கினேன். செய்கூலியாவது வந்ததே.. சேதாரம் போகட்டும் என 15 நாள் மருத்துவமனையில் தங்கி வீடு வந்த அடுத்தநாள் எனது முதலாவது திருமணநாள்.. என் அவளுக்கு 'நானே' திருமணநாள் பரிசாக..
கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஓய்விலும் பிசியோதெரபிஸ்ட் நண்பன் தம்பிதுரையின் சிகிச்சையாலும் ஓரளவு மீண்டேன்.. 'உனக்கு வேறு வழியில்லை.. பொம்ம மாதிரி பொழுத ஓட்ட வேண்டியதுதான்" என்ற "அன்பான" அறிவுரைகளை ஏற்று வருடக்கணக்கில் நாட்களை கடத்திக்கொண்டிருந்தேன்...
மீண்டும் அடுத்த பூகம்பம்... நான்கு ஆண்டுகளுக்கு முன்....... அதிக எடையுள்ள பொருளை கையாண்டதால் முதுகு தண்டுவடத்தில் Disk C6-C7 ல் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வலது கை, முதுகு பகுதியில் தாங்கமுடியாத வலி.. மீண்டும் MRI ஸ்கேன் பார்த்து பிரச்சினைகளை கண்டறிந்து கோவை PSG மருத்துவமனையில் மீண்டும் Dr.பிரானேஷ் வாயிலாக அனுமதிக்கப்பட்டேன். வலி நிவாரணி மற்றும் பிசியோதெரபி சிகிச்சை தான்.. ஓரளவு குணமாகி கிளம்பும்போது இரண்டு சக்கரவாகனம் ஓட்டக்கூடாது, அலுங்காமல் குலுங்காமல் இருக்கவேண்டும், முக்கியமாக இரண்டு மாதமாவது பிசியோதெரபி மற்றும் ஓய்வில் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்துடன் வீடு சேர்ந்தேன்.
பிசியோதெரபிஸ்ட் நண்பர் மதனகோபாலனின் உதவியோடு வீட்டிலேயே தினமும் Traction போட்டு வந்தேன்.. தினமும் இருவேளை 1 மணிநேரம் போதும் என்றால் நான் 2 மணிநேரம் போடுவதும், 5 கிலோ எடை என்றால் நான் 7 கிலோ போடுவதும் (சீக்கிரமே குணமாகுமே என்ற நப்பாசை தான்..)... ஒருவழியாக மரத்துப்போயிருந்த வலது கை கொஞ்சம்கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்ப தொடங்கியது. ஆனாலும் இன்றும் வலது கை ஆட்காட்டி விரலின் நுனியில் உணர்வில்லாத நிலைதான்... மீண்டும் பொம்மை...
யோகா போன்று ஏதாவது கற்கலாம் என முனையும்போதே எனது வரலாறு & புவியியல் தெரிந்தவர்கள் "எந்த பயிற்சி பரிட்சையிலும் இறங்கி உடலை வதைக்காதே " என்ற அன்பு கட்டளைகள்...
எங்கோ ஓரிடத்தில் ஏற்பட்ட விழிப்பு... சரியான இடம் எதுவென்று தெரியவில்லை.. அனேகமாக "உள்ளத்தனைய உடல்" குழும பேஸ்புக் பதிவுகளாகத்தான் இருக்க 200% வாய்ப்பு...
நமக்காக சதா 24 மணி நேரமும் உழைக்கும் நம் உடலின் நலனுக்காக நாம் எத்தனை நேரம் உழைக்கிறோம்? என்ற கேள்விக்கு கூட பதிலில்லாத நிலையில்......... முகநூலில் திரு.ஈரோடு கதிர் அவர்களின் பதிவுகளை பார்த்து.. பிரமித்து.. எப்போதும் பிஸியாக இருக்கும் இவரால் எப்படி..... இதற்கெல்லாம் தனியாக நேரம் ஒதுக்கி, சிறப்பாக செயல்பட முடிகிறது ?? என வியந்து, நானாக அவரிடம் கேட்டபோது.."வாங்க.. முடிஞ்சா தொடருங்க.. முடியலன்னா .. விலகிடுங்க.." என்ற அவரின் (ஒப்புதலோடு) ''ஒப்பந்தத்தோடு" என்னை "உள்ளத்தனைய உடல்" குழுமத்தில் (உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டும் இணைந்த முகநூல் குழு - எல்லா வகையான பயிற்சிகளும்) இணைத்துக்கொண்டேன்...
![]() |
| https://www.facebook.com/groups/494414430753853/ |
குழுவில் இணைந்த (பழக வந்த) புதிதில்... மற்ற உறுப்பினர்களின் அன்றாட பதிவுகளை பார்த்தால் வியப்பாக இருக்கும்... அட.. இவ்வளவு பேர் (நான் இணையும்போது சுமார் 600 பேர்.. தற்போது சுமார் 2800 பேர்.. அன்றாடம் சராசரியாக பதிவிடும் சுமார் 100 பேர்..) தங்களுக்காக, தங்களின் உடலுக்காக அதன் நலனுக்காக தினமும் இத்தனை அதிகாலையில் பயிற்சியில் உழைக்கிறார்களா???? என்று 'ஆ' வென பார்த்திருக்கிறேன்...
சரி.. ஆசைப்பட்டு உள்ளே வந்தாச்சு.. ஏதாவது பயிற்சி பதிவு போடனும்னு முடிவோட நம்ம உடம்புக்கு நடைப்பயிற்சி மட்டும்தான் சாத்தியம்னு முடிவும் பண்ணிட்டு... அடுத்தநாள் காலை 5 மணிக்கு அலாரம் வைத்தால்.. எழுந்தது என்னவோ 7:30 க்கு...(அலாரம் அடிச்சப்போ ஆஃப் பண்ணிட்டு தலை வரைக்கும் போத்திகிட்டு தூங்கினத .. வெளியே சொல்லப்படாதில்ல) இது சில நாட்கள் தொடர்ந்ததால்.. நீங்களாவது? போறதாவது? ன்னு வீட்டம்மா "பாராட்டு" வேற.. அட இதுலயும் ஏழரையான்னு .... இன்னிக்கு எப்படியாவது முழிச்சு கிளம்பிரணும்னு... அடுத்தநாள் நான் எழுந்தபின் அடித்த அலாரத்தை அணைத்தேன்...
தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கும் கிராமம் என்பதால் எந்த பக்கம்..? எந்த வழியில் ? போவது என்ற கேள்விக்கு பதிலாய் தேசிய நெடுஞ்சாலையை தேர்ந்தெடுத்தேன்... கையில் டார்ச்.. காலில் ஸ்லிப்பர்... அந்த நேரத்திலேயே தினமும் என்னை பார்த்த "டீக்கடை"அரசியல் நிபுணர்கள் என்னை பார்த்து முணுமுணுக்கிறார்கள்...(என்ன??? என்பதை 'ஒற்றர்கள்' மூலம் பிறகு அறிந்தேன்... "பாவம்.. பையன்.. இப்பதான் கொஞ்ச நாள் முன்னால செத்துபொழச்சான்... இந்த வயசுலயே "சக்கர" வேற ஏறிடுச்சிபோல.. சரி.. சரி.. தாத்தாவுக்கு இருந்திச்சில...பேரனுக்கும் வந்திருக்கும்.. பரம்பர வியாதிதான... அதான் வாக்கிங் போறான் போலனு...")
முதல் நாள் வெறுமனே 2 கி.மீ என்ற கணக்கில் துவங்கினேன்.. குழுவில் பதிவும் செய்தேன்... அட.. இதையும் லைக்கினார்கள்.. கமெண்டினார்கள்... வாழ்த்தினார்கள்...
அதிகாலை எழுவது ஓரளவு கைவந்தது... தேசிய நெடுஞ்சாலையில் பயிற்சி தொடர்ந்தது... பயிற்சிக்காக பிரத்யேக செயலி கொண்டு கணக்கிட்டு செயல்பட ஆரம்பித்தேன்... அப்படி ஒருநாள் மிதமான சாரல் மழையில் ஆனந்தமாய் நடைபயின்றதை குழுவில் பதிவிட்டபோது... "சகோ.. தேசிய நெடுஞ்சாலை நடைப்பயிற்சிக்கு உகந்தது அல்ல.. விடியற்காலை நேரம் வாகனங்கள் அரை தூக்கத்தில் வரும்.. ரூட்டை மாத்துங்க" என்ற அறிவுரை பின்னூட்டம் தந்து அறிமுக தொடர்புள்ளி போட்டார்.. சகோதரர் துரை அரசு... அப்போதுதான் உள்ளூர் நட்புகள் சிலர் சொந்த ஊரில் பள்ளி மைதானத்தில் தினமும் நடைபயிற்சியில் இருப்பார்கள் எனவும், தற்போது யாரும் கம்பெனிக்கு இல்லாததால் வந்த ஓரிருவரும் வருவதில்லை எனவும் அறிந்தேன்...
ரூட்டை மாற்றினேன்... உள்ளத்தனைய உடல் குழுவில் 21நாள் சவாலும் (தினமும் இடைவிடாது தொடர்ந்து 21 நாள் பயிற்சி) ஆரம்பிக்கப்பட்டது... நான் படித்த எனது சொந்த பள்ளி மைதானத்தில் வலம் வந்தேன்... எவ்வளவு தூரம் என்பதை விட்டு தவறாது தினமும் தொடர்ந்தேன்... "இதோ.. நம்ம பயபுள்ள தினம் வாக்கிங் வருது போலனு".. ஒன்று இரண்டாகி 8 பேர் ஒரு குழுவாய் மாறினோம்...
ஸ்லிப்பர் போய் ஷூ வந்தது.. இத வாங்கினதுக்காகவாவது நடக்கலாம்பா.. என்ற என் மனதோடு.. நானும் வருகிறேன் என உடன் வந்தான் எனது 11 வயது மகனும்... உடன் வந்த இரண்டு மாதங்களில் நிறைய பேசிக்கொண்டே நடந்ததில் இருவருக்குமான இடைவெளி மட்டுமல்ல... அவனுக்கு லேசாய் புடைத்திருந்த வயிறும் குறைந்தது.. 'இந்த வயதில் உடலை வருத்த வேண்டாம்.. இந்த அதிகாலை எழும் பழக்கம் படிப்பதற்கு உபயோகப்படும்' என நானாக மகனை தவிர்த்தேன்... இப்போதெல்லாம் சோம்பலின்றி எழுகிறான்.. விடுமுறை நாட்களில் தவறாமல் வந்துவிடுகிறான்.
தினமும் நடைப்பயிற்சியா?? வேறு ஏதாவது? என்றபோது ... 'முன்ன நாங்க டெய்லி ஷெட்டில் ஆடுவோம்..இப்ப செட்டு இல்லை' என்ற அண்ணனிடம் "நாம ஆடலாம்னு" சொல்ல... எனக்கு Yonex ம்.. மகனுக்கு Konex ம்.. வந்தாச்சி.. அடுத்தநாள்முதல் நடையும் இறகுப்பந்தும்... நடை 1 மணிநேரம்.. இறகுபந்து 30 நிமிடம் என தொடர்ந்தோம்... நடந்து.. இறகு பந்தாடி.. தவறாமல் பதிவிட்டு லைக்குகள் போட்டு கமெண்டும்போது... வான்ட்டடா வந்து சிக்கியது போல் சகோ துரையின் கண்ணில் சிக்க... அவராக முன்வந்து ஜனவரி மாதம் முழுவதும் குழுவை நடத்தும் பொறுப்பை வழங்கியதால் அதன்மூலம் ஒரு நட்புசூழ் உலகை பரிசாய் பெற்றேன்.
"என்னடா..இது? ஆச்சரியம்... தினமும் டான்னு 5 மணிக்கு எழுந்து போயிடறாரு... உங்கப்பா?" என்று மகனிடம் "பாராட்டிய" மனைவியை புன்னகைத்து கடந்தேன்.
இந்தநிலையில் உடல் பருமனை குறைக்க தினம் 3 கி.மீ ஓடும் தம்பி பாலமுருகனை பார்த்து .. நாமும் ஓடலாமா?.. என நினைப்பதும், பிறகு.. அடச்சே!! நாமென்ன குண்டாவா இருக்கோம்...? ஒட்டடைக்குச்சிக்கெதுக்கு ஓட்டம்னு இருந்துட்டேன்...
குதித்து குதித்து ஓடும்போது தலைக்கு மீண்டும் ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற பயமும் ஒரு காரணம்.. "அதென்னவோ.. தெர்லனா? ஒரு நாள் ஓடலனாலும் அன்னிக்கு பொழுது நல்லாவேயில்ல.. சுறுசுறுப்பா இல்லனு.." பாலா சொல்லும்போது
அட.. "ஏன்? நாமும் ட்ரை பண்ணக்கூடாது..? " சும்மா.. நடந்துட்டே இருக்கோமே..!! இரண்டு ரவுண்டு ஓடித்தான் பாக்கலாமே? என்னதான் ஆயிடும்.. ? என்ற கேள்வியோடு எழுந்த எண்ணம்தான் இன்றுவரை ஓடியுள்ள இத்தனை மாரத்தான் ஓட்டங்களுக்கான ஆணி வேர்.. எப்படி ஓடனும்? எத்தனை தூரம் ஓடலாம்? ஓடும்போது வரும் பிரச்சினைகள் என்ன? மூச்சு முட்ட ஓடலாமா? Pace னா என்ன? உணவு முறைகள் எப்படி இருக்கனும்? என்ற எந்த அடிப்படையும் தெரியாமலேயே ஓட ஆரம்பித்தேன்... மெதுவாக.. 3 கி.மீ.. 4 கி.மீ... 5 கி.மீ.. என படிப்படியாக தூரத்தை அதிகப்படுத்த... பிரச்சனை ஏதுமில்லை என்றபோது.. 'அடடே.. இத்தனை நாட்களை வீணாக்கிவிட்டோமே?' என்று என்னை நானே குட்டிக்கொண்டேன்...
இந்நிலையில் அவ்வப்போது எனது பதிவுகளை பார்த்து வரும் ஓட்ட எந்திரன் ராஜ்குமார் பணி நிமித்தமாக நண்பர் ஆனந்தனுடன் எனது ஊரைக்கடந்தபோது திடீரென்று நான் நினைவில் வர... அழைத்தார்... சந்தித்தோம்.. முதல் சந்திப்பு.. தேநீர் அருந்தியபடி பேசியதில் நிறைய தகவல்கள் மற்றும் அனுபவங்களை உள்வாங்கினேன். வெறும் ஓட்டத்தின் மூலமே கிட்டத்தட்ட 25 கிலோ உடல் எடையை குறைத்த மகான்... இவரின் ஆலோசனைகளும், அறிவுரைகளுமே எனது ஓட்டங்களுக்கு அடித்தளம்... இன்றும் எனது ஓட்டத்தை எப்போதும் கண்காணித்து அவ்வப்போது தேவையான நேரங்களில் ஊக்கமும் உற்சாகமும் தருவார்.
இவரின் வழிகாட்டலில் ... பதிவுத்தொகை இல்லாத சென்னை "Tower Twisters" நடத்திய மாரத்தான் போட்டியில் 10 கி.மீ பிரிவில் பதிவு செய்து கடந்த 9-ஏப்ரல்-2017 ல் எனது முதல் மாரத்தான் பயணம் ஆரம்பமானது.
அடுத்து சேலம் ரன்னர்ஸ் இந்தியா குழுவினர் ஏற்காடு மலை அடிவாரத்தில் அற்புதமான சூழலில் நடத்திய மாரத்தானை 1 மணி நேரத்தில் ஓடி முடித்தேன். சொந்த ஊரில் மலைப்பாதையில் ஒரு சுகமான அனுபவம்.
இதற்கெல்லாம் திருஷ்டி வைத்தது போல "அனுபவமில்லாதவர்கள்" நடத்தும் மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள கூடாது" என்ற அனுபவத்திற்காக கோவையில் 10 கி.மீ மாரத்தானில் (பெயர் வேண்டாம்) 8.5 கி.மீ (தூரமே அவ்வளவு தான்) 48 நிமிடத்தில் முடித்து அறிவையும் அனுபவத்தையும் கற்றேன்.
DRHM 2017 - சென்னை, எனது முதல் அரை மாரத்தான் (21 கி.மீ)
இதற்கெல்லாம் திருஷ்டி வைத்தது போல "அனுபவமில்லாதவர்கள்" நடத்தும் மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள கூடாது" என்ற அனுபவத்திற்காக கோவையில் 10 கி.மீ மாரத்தானில் (பெயர் வேண்டாம்) 8.5 கி.மீ (தூரமே அவ்வளவு தான்) 48 நிமிடத்தில் முடித்து அறிவையும் அனுபவத்தையும் கற்றேன்.
DRHM 2017 - சென்னை, எனது முதல் அரை மாரத்தான் (21 கி.மீ)
வோடபோன் கோயம்புத்தூர் மாரத்தான் (21k)... 1st October 2017
03 Dec 2017, விப்ரோ சென்னை மாரத்தான்(21k), சென்னை
07 Jan 2018, முத்து மாரத்தான்(21k), கொங்கணாபுரம், சேலம்
எனது 6வது_அரை_மாரத்தான் – 2018 ம் ஆண்டின் முதல் மாரத்தான்
21.1 கி.மீ கடந்து எல்லையை 1:57:21 மணிக்குள் தொட்டபோது... இதுவே எனது தனிப்பட்ட சிறந்த நேரமாக ( Sub 2) பதிவானது.
21.01.2018, சேலம் மெகா மாரத்தான் ...
மகனோடு ஒரு ஓட்டம் ... (10 k)
27 Jan 2018, கொடைக்கானல் மலை அல்ட்ரா (21 k), கொடைக்கானல்
மகனோடு ஒரு ஓட்டம் ... (10 k)
27 Jan 2018, கொடைக்கானல் மலை அல்ட்ரா (21 k), கொடைக்கானல்
11 Feb 2018, ஆரோவில் மாரத்தான்.. (21k), பாண்டிச்சேரி
18 Feb 2018, ஏற்காட்டில் ஒரு மலையோட்ட (மாரத்தான்) அனுபவம்... (25k), ஏற்காடு
OotyUltra 2018 - 30k ஊட்டியில் மலையோட்டம்...
ஈரோடு ரன் - அரை மாரத்தான் ... (21k) 22.04.2018
100 நாட்கள்...
110:05:44 மணிகள்..
1,123.45 கி.மீட்டர்கள்...
100 பாதைகள்...
ஒரே குறிக்கோள்...
கடந்தபோன எனது 17 மாத ஓட்ட வாழ்வில் எனக்கு நானே போட்டியாளனாய் இருந்து செய்த அத்தனை சாதனைகளையும் இந்த 100 நாட்கள் சாதாரணமாக்கியிருக்கிறது.
400 மீட்டர் : 1:28 நிமிடம்
1 கி.மீ : 4:12 நிமிடம்
5 கி.மீ. : 22:15 நிமிடம்
10 கி.மீ : 50:19 நிமிடம்
20 கி.மீ : 1:46:31 மணி
21.1 கி.மீ : 1:52:51 மணி
30 கி.மீ 2:47:47 மணி
32.2 கி.மீ 2:58:27 மணி
41.195 கி.மீ 04:13:15 மணி
முத்தான முதல் முழு மாரத்தான்...
Airtel Hyderabad Marathon 2018 (26.08.2018)
முதலாவது முழு மாரத்தான் 42.195 கி.மீ (04:13:15 மணிக்குள்) முடித்ததற்கான பதக்கம் கழுத்தில் அணிவித்தபோது அளவுகடந்த மகிழ்ச்சி.. மயிர்க்கூச்செறிய பெற்றுக்கொண்டேன்.
இத்தனை நாளும் நான் ஒரு தொலைதூர ஓட்டக்காரன் என்று சொல்வதில் ஒரு இனம்புரியா தயக்கம் இருந்துகொண்டே இருந்தது... இந்த ஏர்டெல் ஹைதராபாத் மாரத்தான் ஓடி முடிக்கும்வரையிலும்... ஏதோ நாமும் 1% சாதித்த மனநிறைவு..நவம்பர் 18, GG கோவை புதூர் 21 k..
06 ஜனவரி 2019 ... சென்னை மாரத்தான்.. 32 k ( 20 மைல்)
20 ஜனவரி 2019 ... டாட்டா மும்பை மாரத்தான் (42.195 k)...
27.03.2019 வல்வில் ஓரி அல்ட்ரா மாரத்தான் ... 52 k..
வல்வில் ஓரி அல்ட்ரா 52 k ஓட்ட அனுபவங்கள்... பற்றி படிக்க ..
100 நாள் ஓட்ட சவால் - 2019
இரண்டாவது முறையாக..
இரண்டாவது முறையாக..
HDOR 5th Edition
(ஏப்ரல் -27 - 2019 முதல் ஆகஸ்ட் - 4 - 2019 வரை)
(ஏப்ரல் -27 - 2019 முதல் ஆகஸ்ட் - 4 - 2019 வரை)
√ 100 நாட்கள்
√ 73 மணிநேரம்
√ 743 கி.மீ (5:54 mins/Km)
√ 100 பாதைகள்
√ ஒரே குறிக்கோள்..
√ 73 மணிநேரம்
√ 743 கி.மீ (5:54 mins/Km)
√ 100 பாதைகள்
√ ஒரே குறிக்கோள்..
TROT 11
27.07.2019
Tough gets Tougher..
சமீபமாக இந்த சவால்களை சந்திக்கும் மனப்பாங்கு எனக்குள் அதிகரித்திருக்கிறது..
ஏற்கனவே எனது முதல் மாரத்தான் ஹைதராபாத்தில் ஓடும்போது பலரின்கேள்வி.. 'முதல் மாரத்தான் ஹைதராபாத்திலா? ரொம்பவும் கடினமாக இருக்குமே' என்றவர்களுக்கு எனது பதில் "அதனாலென்ன? இருக்கட்டுமே.. அதுவும் ஒரு அனுபவம்தானே"என்பதுதான்.
அங்கு எனது சிறந்த நேரமாக 4:13 ல் நிறைவு செய்தேன். எனக்கே ஆச்சரியம்தான்..
அதிலிருந்து ஒவ்வொன்றாக தேட ஆரம்பித்தேன்.
அதில் ஒன்றுதான் இன்று ஓடிய TROT 11 பெங்களூர் மாரத்தான்..
மிக கடினமான ஓடு பாதை. சாதாரணமாக ஓட இயலாது. பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் பாதை .. அதில் ஓடும்போதுதான் தெரியும் அதன் ரூபம். அதை உண்மையில் அனுபவித்தேன். ஏற்கனவே கொல்லிமலையில் 52 கி.மீ ஓடிய அனுபவம் இருந்தாலும் அதிகாரப்பூர்வ நிகழ்வு இது என்பதும் ஒரு காரணம்.
கோயம்புத்தூர் ரன்னர்ஸ் சார்பில் குழுவாக பதிவு செய்திருந்தேன் Arunan மூலமாக..
சென்றதும் Suriya praksah சாரோடு அவரது காரில்.. சேலத்தில் இணைந்துகொண்டேன்.
பிப் வாங்கி ஹோட்டல் அறையை அடைந்து தயாராகி ஓட்டம் தொடங்கும் இடத்தை பார்வையிட சென்றோம். அப்போதே பாதி ஆரூடம் தெரிந்தது.
அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து தயாராகி 4.15 க்கு ஓட்டம் தொடங்கும் இடத்தை அடைந்தோம்.
4:30 க்கு சரியாக ஓட்டம் துவங்கியது.. 50 கி.மீ, 42 கி.மீ ஓடும் அனைவரும் ஒரே நேரத்தில்.
8 கி.மீ வரை ஒன்றும் இல்லை. வழக்கமான ஓட்டம்.
அதன்பின் ஆரம்பித்தது சவால்.. மலையில் ஓட்டம்.
உதவி மையங்களின் பங்களிப்பு அபாரம்.. நாம் வேண்டாம் என்றாலும் தேடித்தேடி தந்த அந்த ஒரு விஷயம் உண்மையில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அருமை.. அட்டகாசம்..
33 வது கி.மீட்டரில் மீண்டும் அதே மலை.. அதே சவால்..
42 கி.மீ முடித்ததும் Finish Point வந்து மீண்டும் 8 கி.மீ நிறைவு செய்வதுதான் மிகப்பெரிய சவால். நம் மனமானது இதோ இவ்வளவுதான் என எண்ணும்போது மீண்டும் ஓடும் மனநிலை தான் இங்கு சவால்.
42 கி.மீ 4:35 ல் முடித்து மீண்டும் 8 k முடிக்க திரும்பும்போது எதிரே வந்த Priya, Manju வசம் டார்ச், சிப்பர் என அனைத்தையும் ஒப்படைத்து ஓட ஆரம்பிக்கும்போதுதான் புரிந்தது நான் செய்த தவறு. வெயில் வேகமெடுக்க பசி ஒருபக்கம் படுத்த கிட்டத்தட்ட 2 கி.மீ நடந்தே சென்றேன். எங்கும் நடக்காமல் போகவேண்டும் என்ற எனது எண்ணம் பலிக்காமல் போனது.
45 வது கி.மீட்டரில் இருந்த உதவி மையத்தில் தேவையானவற்றை எடுத்துக்கொண்ட பிறகே ஓட முடிந்தது.
46 வது கி.மீட்டரில் தொடங்கிய ஓட்டம் எங்கும் தடையின்றி தொடர்ந்தேன்.
இருக்கும் அத்தனை சக்தியையும் திரட்டி ஓடிய ஓட்டம். மேடான பகுதியிலும் சீரான வேகத்தில் ஓட்டம்...
ஏற்கனவே 6:00 மணி நேரத்திற்குள் முடிக்க முடிவு செய்திருந்தேன்.
5:59:39 ல் 50வது கி.மீட்டரை தொட்டதும் கிடைத்த ஆனந்தம்.. அதற்கு இணையே இல்லை..
50 கி.மீட்டர் முடித்ததற்கான பதக்கம் அணிவித்தபோது பட்ட அத்தனை கஷ்டங்களும் பஞ்சாய் போனது.
நேரம் கடந்திருந்ததால் நிறைய நண்பர்களையும் தோழியரையும் சந்திக்க இயலாதது மட்டும் ஒரு குறையாய் போனது.
சிறுசிறு குறைபாடுகள் தவிர்த்து பார்த்தால் "Tough gets Tougher.." என்ற வாசகத்திற்கு பொருத்தமான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை...
மால்நாடு அல்ட்ரா ட்ரையல் 80 k
02.11.2019
80 கி.மீட்டர்.. இதுவரை எனது அதிகபட்ச ஓட்ட தூரம்.. காலை 6:45 க்கு தொடங்கிய ஓட்டம் சரியாக இரவு 10:05 க்கு நிறைவு செய்தோம். 20 நிமிடங்கள் அதிகமாக போனதால் பதக்க வாய்ப்பு இல்லை என்றாலும் தூரத்தை கடந்தோமே என்று மனதை சாந்தப்படுத்தி மேடை அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து "மதியம் சாப்பிட்ட நேரத்தை குறைத்து அரைமணி முன்னால் கிளம்பியிருந்தால் பதக்க வாய்ப்பு இருந்திருக்குமே.." என யோசித்தபோது "சார்.. வாங்க.. மெடல் வாங்கிக்கோங்க.." என்ற குரல்.. 'அடடா.. இவ்வளவு கடின உழைப்பு வீணானதோ?' என்ற எண்ணத்தை உடைத்தது.
"இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலா? " என்று கேட்டு யாரோ என்னை வாஞ்சையுடன் தடவுவது போலிருந்தது.. 80 கி.மீ நிறைவு செய்த மனதோடு திருப்தியடைந்து இருந்தவனை மேடைக்கு அழைத்து பதக்கமும் தந்தபோது.. இந்த மால்நாடு ஓட்டத்திற்கான அத்தனை உழைப்பு, நேரம், பயிற்சி, காலை முதல் இரவு வரைக்கும் கொண்ட வலி, காயம் மற்றும் கனவுகள் என அத்தனைக்கும் கிடைத்த அங்கீகாரமாக பதக்கத்தை பெற்றபோது அளவில்லாத ஆனந்தத்தில் திளைத்துப்போனேன்.
எனது மால்நாடு அனுபவங்கள் பற்றி படிக்க.. இங்கே கிளிக் செய்யவும் ..
RRMM 2019
15 Dec 2019
Rasipuram
Pacer
2:15:52 ✔️
21244: Congratulations on finishing Rasipuraam Rotary Mega Marathon 21K with a Net time 2:15:52 https://sport.iq301.com/
SPCM 2020
42 K
05 Jan 2020
Dear Bala Murali, Congratulations on successfully completing Skechers Performance Chennai Marathon 2020 - Full Marathon in 05:31:59.
Please check your provisional timing results here http://bit.ly/2FovPxv . My Race Timing Solutions.
*******************
(as per STRAVA and Map my Run Record)
Lion Balamurali P's Running stats as on 04.04.2025
Strava + MapMyRun
Run - All Time Stats:
- Runs: 873 + 180 (Includes 4 Indoors)
- Distance: 7624.83 km + 1247 (Includes 31.08 km of Indoors)
- Moving Time: 754:22:27 hours (Includes 03:04:52 hours of Indoors)
- Elevation Gain: 74.68 km
- Biggest Run: 74.68 km
- 5' kms: 403
- 10' kms: 303
- HM's:(21.2 kms) 47
- FM's:(42.2 kms) 3
- Ultra's:(50+52+80) kms- 3
இப்படி மாங்கு மாங்குனு ஓடறியே.. இதனால என்ன பிரயோஜனம்? என்ன லாபம்? என்ற சிலருக்கான பதில்:
* நிறைய பாடம் கற்கிறேன்..
* அதிகாலை விழிப்பு வழக்கமானது.
* சுறுசுறுப்பு..
* அன்றைய தினத்தை திட்டமிடல்..
* என்னையே சுயபரிசோதனை செய்தல்..
* தன்னம்பிக்கை.. தைரியம்..
* ஆரோக்கியம்...
* நல்ல நட்புகள்..
* சக ஓட்டக்காரர்களோடு சிறந்த அனுபவம்...
* எல்லாவற்றுக்கும் மேலாக .. "வயசானாலும் அந்த அழகும் இளமையும் அப்படியே இருக்கு" ன்ற மாதிரியான திரும்பும் இளமை.. (கொஞ்சம் ஓவர்தான்.. அட்ஜஸ்ட் பிளீச்..) இதைவிட வேறென்ன வேணும்?
* அதிகாலை விழிப்பு வழக்கமானது.
* சுறுசுறுப்பு..
* அன்றைய தினத்தை திட்டமிடல்..
* என்னையே சுயபரிசோதனை செய்தல்..
* தன்னம்பிக்கை.. தைரியம்..
* ஆரோக்கியம்...
* நல்ல நட்புகள்..
* சக ஓட்டக்காரர்களோடு சிறந்த அனுபவம்...
* எல்லாவற்றுக்கும் மேலாக .. "வயசானாலும் அந்த அழகும் இளமையும் அப்படியே இருக்கு" ன்ற மாதிரியான திரும்பும் இளமை.. (கொஞ்சம் ஓவர்தான்.. அட்ஜஸ்ட் பிளீச்..) இதைவிட வேறென்ன வேணும்?
ஓட்டத்தை விரும்பும் புதியவர்களுக்கு... எனக்கு தெரிந்த சில ஆலோசனைகள்
(சொல்லும் அளவிற்கு தகுதி இல்லையென்றாலும் இதுவரை கண்ட அனுபவத்திலிருந்து)...
(சொல்லும் அளவிற்கு தகுதி இல்லையென்றாலும் இதுவரை கண்ட அனுபவத்திலிருந்து)...
* மனதளவில் தயாராகுங்கள்..
* மெதுவாக மித ஓட்டமாக தொடங்குங்கள்..
* மெதுவாக மித ஓட்டமாக தொடங்குங்கள்..
* தொடக்கத்தில் குறைந்த தூரமே இலக்காக இருக்கட்டும்..
* முடிந்தவரை தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் தவறாமல் பயிற்சி எடுங்கள்..
* புதிதாய் ஓட்டம் துவங்கும்போது கால், முட்டியில் ஏற்படும் வலியினை கண்காணியுங்கள். ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகும்.. தொடர்ந்து இருந்தால் சிகிச்சை அவசியம்.
* முடிந்தவரை தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் தவறாமல் பயிற்சி எடுங்கள்..
* புதிதாய் ஓட்டம் துவங்கும்போது கால், முட்டியில் ஏற்படும் வலியினை கண்காணியுங்கள். ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகும்.. தொடர்ந்து இருந்தால் சிகிச்சை அவசியம்.
* பயிற்சியின்போது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்துங்கள்.. காயத்தை அதிகமாக்காதீர்கள்..
* சரியான அளவிலான காலணி மிக முக்கியம்..
* ஓடும் முன்பும் ஓடிய பின்பும் உடல் தசை தளர்வு பயிற்சிகள் அவசியம்..
* நல்ல நீர்ச்சத்து உள்ள பானங்கள், தண்ணீர் அருந்துவது கட்டாயம்..
* சரியான அளவிலான காலணி மிக முக்கியம்..
* ஓடும் முன்பும் ஓடிய பின்பும் உடல் தசை தளர்வு பயிற்சிகள் அவசியம்..
* நல்ல நீர்ச்சத்து உள்ள பானங்கள், தண்ணீர் அருந்துவது கட்டாயம்..
* ஓடும்போது பருத்தி ஆடைகள் தவிர்த்து எளிதில் உலரும் ஆடைகள் அணிவது நலம்..
* உணவில் புரோட்டீன், கார்ப்ஸ் சத்துக்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்...
* ஒரேயொரு முறை ஏதேனும் குறைந்த அளவு தூர மாரத்தான் நிகழ்வுகளில் பங்கெடுங்கள்... பின் நீங்களாகவே தயாராவீங்க..
* முயற்சியும் முறையான பயிற்சியும் போதும்...
* உடலின் ஏதோ ஒரு வகையிலான பாதிப்பை மனதில் வைத்து முயலாமல் மட்டும் இருக்காதீர்கள். ஒருநாள் அதற்காக வருந்தும் சூழல் வரலாம்.
* ஓட்டம் உங்களுக்குள் கண்டிப்பாய் தரும் ஒரு மாற்றம்...
* உணவில் புரோட்டீன், கார்ப்ஸ் சத்துக்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்...
* ஒரேயொரு முறை ஏதேனும் குறைந்த அளவு தூர மாரத்தான் நிகழ்வுகளில் பங்கெடுங்கள்... பின் நீங்களாகவே தயாராவீங்க..
* முயற்சியும் முறையான பயிற்சியும் போதும்...
* உடலின் ஏதோ ஒரு வகையிலான பாதிப்பை மனதில் வைத்து முயலாமல் மட்டும் இருக்காதீர்கள். ஒருநாள் அதற்காக வருந்தும் சூழல் வரலாம்.
* ஓட்டம் உங்களுக்குள் கண்டிப்பாய் தரும் ஒரு மாற்றம்...
முக்கியமான வேண்டுகோள்.. அனைவருக்கும்...
* கண்மூடித்தனமான அறிவுரை (என்ற பெயரில் சிலர்/மருத்துவர் கூறும் ஆலோசனை) களை அப்படியே நம்பாதீர்கள்... நான் நம்பியதால்தான் இத்தனை ஆண்டுகளை வீணடித்திருக்கிறேன். ஒவ்வொருவரின் உடலமைவும் ஒரே மாதிரி இருக்காது.
* மேலோட்டமாக சுயபரிசோதனை செய்து பாருங்கள்...
* மனம் ஒன்றி முயன்று பாருங்கள்.. எல்லாம் கை கூடும்...
* எனக்குள் இருந்த என்னை, நான் கண்டெடுக்க காரணம்.."உள்ளத்தனைய உடல்(U2) " முகநூல் குழு அன்றி வேறில்லை... எனக்கு தூண்டுகோலாக இருந்த எத்தனையோ உள்ளங்கள் உள்ள நம் குழுவில்... என்னால் ஒருவராவது தெளிந்தால் அது எனக்கு மகத்தான வெற்றி..
* மேலோட்டமாக சுயபரிசோதனை செய்து பாருங்கள்...
* மனம் ஒன்றி முயன்று பாருங்கள்.. எல்லாம் கை கூடும்...
* எனக்குள் இருந்த என்னை, நான் கண்டெடுக்க காரணம்.."உள்ளத்தனைய உடல்(U2) " முகநூல் குழு அன்றி வேறில்லை... எனக்கு தூண்டுகோலாக இருந்த எத்தனையோ உள்ளங்கள் உள்ள நம் குழுவில்... என்னால் ஒருவராவது தெளிந்தால் அது எனக்கு மகத்தான வெற்றி..
"நம்மால் சாதாரணமாய் மற்றவர்கள் போல ஓட இயலுமா? என்ற எனது கேள்விக்கு நானே பதிலாய் இப்போது ஓட்டக்களத்தில் மாரத்தான் வீரனாக.."
"நம்மால் முடியாது என்று ஒதுக்கும் ஒன்றை யாரோ.. எங்கோ... செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்" என எங்கோ படித்த ஞாபகம்...
தனி ஒருவனாக சிறிய கிராமத்தில் இருந்துகொண்டு
"நம்மால் முடியாது என்று ஒதுக்கும் ஒன்றை யாரோ.. எங்கோ... செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்" என எங்கோ படித்த ஞாபகம்...
தனி ஒருவனாக சிறிய கிராமத்தில் இருந்துகொண்டு
என்னால் முடிந்தது.... உங்களால் முடியாதா??
"அதென்னவோ தெரியலப்பா.. ஏதாவது ஒருநாள் மிஸ் பண்ணாலும்.. ஏதோ சரியில்லாத மாதிரியே ஃபீல் ஆகுது.." - இப்பவெல்லாம் நான் சொல்றது...
நண்பர்களே... இது வெறும் வார்த்தைக்காக அல்ல... . எத்தனையோ இடர்பாடுகள் கடந்து என் வாழ்வின் இரண்டாம் பிறப்பில் இப்படி ஒன்று நடக்கும் என என்னை நானே இன்னொரு கோணத்தில் பார்த்து வியக்கும் அளவிற்கு கொண்டு வந்த "உள்ளத்தனைய உடல்" முகநூல் குழுமத்திற்கும் அதன் நிறுவனர் குருஜி ஷான் அவர்களுக்கும், இந்த எனது அனுபவத்தை எழுத தூண்டிய "ஈரோடு வாசல்" வாட்சப் குழுவிற்கும் குழுவில் இணைத்து ஊக்கம் தந்த திரு ஈரோடு கதிர் சார் அவர்களுக்கும், எனது மனைவி உள்ளிட்ட குடும்பத்திற்கும், நான் இந்த நிலை வரை வர காரணமான ஒவ்வொருவருக்கும், மனமார்ந்த நன்றி..
இவ்வ்வளவு தூரம் என் எழுத்துக்களோடு பயணித்த உங்களின் பொறுமைக்கும் (உங்களுக்கும்) மிக்க நன்றி...
இன்னும் காத்திருக்கும் தூரங்களை காலம் அனுமதித்தால் கட்டாயம் கடப்பேன்...
இதோ விளையாட்டு வீரராக என்னை தொடர...
My STRAVA Account
எனது ஒவ்வொரு மாரத்தான் அனுபவங்களோடு பயணிக்க...
https://edhayan.blogspot.com/2018/11/blog-post.html
முகநூலில் சந்திக்க ... Lion Balamurali P's Profile in Facebook
மீண்டும் சந்திப்போம்....
- அரிமா பாலமுரளி.,
வாழப்பாடி..
98434 75675,
94432 75675
இவ்வ்வளவு தூரம் என் எழுத்துக்களோடு பயணித்த உங்களின் பொறுமைக்கும் (உங்களுக்கும்) மிக்க நன்றி...
இன்னும் காத்திருக்கும் தூரங்களை காலம் அனுமதித்தால் கட்டாயம் கடப்பேன்...
இதோ விளையாட்டு வீரராக என்னை தொடர...
My STRAVA Account
எனது ஒவ்வொரு மாரத்தான் அனுபவங்களோடு பயணிக்க...
https://edhayan.blogspot.com/2018/11/blog-post.html
முகநூலில் சந்திக்க ... Lion Balamurali P's Profile in Facebook
மீண்டும் சந்திப்போம்....
- அரிமா பாலமுரளி.,
வாழப்பாடி..
98434 75675,
94432 75675
Happy Running...































































































































































































.jpg)


வரி விடாமல் வாசித்தேன்.நான் வாசித்த சுய முன்னேற்ற நூல்களை விட தன் முனைவை தூண்டும் வண்ணம் உள்ளது தங்களின்
ReplyDeleteவாழ்க்கையோட்டம். வாழ்த்துக்கள் நன்றி.
மிக்க நன்றி...
DeleteGreat sir!!! Keep inspiring!!! I was there some of ur events as a participant!!!
ReplyDeleteThank you... Sir..
DeleteGreat achievement friend. May inspire one and all. Proud to be your friend.
ReplyDeleteThank you Sir..
DeleteExcellent bro..
ReplyDeleteThank you.. Sir..
Delete46 வயசாச்சே.. நம்மால ஓட முடியுமான்னு நெனசுகிட்டு இருந்த எனக்கு இது ஒரு பூஸ்ட் கட்டுரை. வாரம் நாலு அல்லது மூணு நாள் நடை, மற்றும் இந்த ஒரு மாதமாக தவறாமல் யோகா செய்து வரும் எனக்கு உங்கள் எழுத்துக்களும் அனுபவமும் நல்ல ஊக்கமாக இருக்கும். உள்ளத்தனைய உடல் குழுவில் இருந்தும்.. தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே அதில் பதிவிட வேண்டும் என்றே இருந்து விடுகிறேன்.. இனி பயிற்சி தொடரும்.. (வலது முழங்காலில் மட்டும் வலி அதிகம் இருக்கு.இருந்தும் ஓட முயற்சி செய்கிறேன்.) அன்புடன் பிரபாகர்.ஈரோடு
ReplyDeleteமிக்க நன்றி...
Deleteஅண்ணா... ✌️
ReplyDeleteதம்பி...
Deleteனைவருக்கும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரக் கூடிய கட்டுரை. மிக்க நன்றி....
ReplyDeleteமிக்க நன்றி...
DeleteGreat, inspiring
ReplyDeleteThank you...
Deleteஅற்புதமான முயற்சி, வெற்றி
ReplyDeleteமிக்க நன்றி...
Deleteஅண்ணா...வாழ்வின் மதிப்புணர்ந்த அவதார புருஷர் தாங்கள்...
ReplyDeleteதன் உயிரினை தன்னுள் வாங்கிக் கொண்டு, தன்னை நம்பி வந்தவளின் நிலை எண்ணி தாங்கள் உதிர்த்த வரிகளில்... நான் உறைந்து போனேன்.. (ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் இப்படியொரு எண்ணம் உதித்தால் நன்றாக இருக்குமே)
அந்த வாழ்க்கையின் நம்பிக்கை விதைதான், முளைத்து இன்று உங்களை அசாத்தியமான ஓட்ட தீவிரவாதியாக மாற்றியிருக்கிறதோ!...
நீள் ஆயுளுடனும், நிறை ஆரோக்கியத்துடனும்.... இன்னும் நிறைய சரித்திரங்களை படைக்க என் மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.... வாழ்க வளமுடன் அண்ணா...
நிச்சயமாக நான் உட்பட...ஈரோடு வாசல், உள்ளத்தனைய உடல் குழுமம் என உங்களையறிந்த அத்தனை பேருக்கும்.. தங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளும் நிமிடங்களில், எங்களின் நினைவலைகளில் இடம்பெற்றிருக்கும் நீங்காத மயில் கல் நீங்கள்தான்...
*வாழ்தல் வரம்* என ஒவ்வொரு முறையும்.. எங்களுக்கு தங்களைப் போன்ற அசாத்தியமான மனிதர்களை தொடர்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கும் ஈரோடு கதிர் அண்ணாவிற்கு பேரன்பும்�� பிரியங்களும்����...
மிக்க நன்றி... உமா..
Deleteஅருமை..வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி...
DeleteWow super sir
ReplyDeleteThank you...
Deleteதொடர்ந்து கலக்குங்க..
ReplyDeleteவாழ்த்துகள்ணா :-)
மிக்க நன்றி...
Deleteதம்பி முரளி...
ReplyDeleteஉன்னை அனைத்துக்கொண்டு முதுகைத்தட்டி..முத்தமிடவேண்டும் போல அவா..!
உங்கள் வாழ்க்கை சிறுகதை சோம்பேறிகளான என்னைப்போன்றோருக்கு சவுக்கடி..!
படிக்க படிக்க மனதில் இனம்புரியா சிறு வலி வந்துபோனது..!
பாராட்ட வார்த்தையேது...!
பலருக்கும் வழிகாட்டியாக தனது வாழ்வியலை அமைத்துக்கொண்ட உமது வழியை பின்பற்ற முயற்சித்தலே உமக்கு பாராட்டாக இருக்கும்...
மிக்க நன்றி...
Deleteமுரளி எனக்கு நண்பராய் கிடைத்தது பெருமை
ReplyDeleteதடை அதை உடை என தரணியில் ஏராளமான சோதனைகளை வென்று சாதனைகளை புரிந்த தங்களை வாழ்த்துகிறேன்...
மிக்க நன்றி...
Deleteமுதுகுவலி அதனுடன் சேர்ந்து கால் வலியும் தொடர்ந்து ஓடுவதற்கு தடைபோட்டுக்கொண்டிருக்கிறது...
ReplyDeleteதற்போது நடக்கவே சிரமப்படும் நான் தங்களின் இந்த ஊக்குவிப்பால் நிச்சயம் மீண்டு(ம்) வருவேன்.....
மிக்க நன்றி... சகோ... வாங்க... வாங்க...
DeleteFeeling proud of u murali
ReplyDeleteHats off
All the best for all u r future endeavours
Thank you... Dr Sir...
Deleteநண்பரே, உங்கள் புன்சிரிப்பின் பின்னணியில் இத்தனை விவரமிருப்பதை அறிந்து அளவிலான வியப்படைந்தேன். நம் சேலம் ரன்னர்ஸ் குழுவுக்கு நீங்கள் ஒரு சிறந்த முன் மாதிரி. உங்களால் பல இளைஞர்கள் கட்டாயம் வாழ்வில் சாதனைகள் புரிந்து நிச்சயம்.
ReplyDeleteமிக்க நன்றி... சார்...
Deleteஅருமை வாழ்த்துகள்...
ReplyDeleteமிக்க நன்றி...
DeleteSuper sir ...Great effort done 👏👏👏
ReplyDeleteGreat efforts.... From no where you have fight for your life and become an ultra runner.... Really inspiriting on your efforts.... Hats off to you sir.... Wishing for more healthy and happy life
ReplyDeleteதங்களுடைய பதிவு என்னன போன்ற பலரை உடற்பயிற்சி செய்ய தூண்டும் என நம்புகிறேன். தங்களுடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
ReplyDelete